தனுஷின் அடுத்த படம் ஓடிடியில் ரிலீசாகிறதா?

Published : Sep 28, 2021, 07:55 PM IST
தனுஷின் அடுத்த படம் ஓடிடியில் ரிலீசாகிறதா?

சுருக்கம்

நடிகர் தனுஷ் (Dhanush) நடிப்பில் ஏற்கனவே, ஓடிடி தளத்தில் 'ஜகமே தந்திரம்' (Jagamea Thanthiram) திரைப்படம் வெளியான நிலையில், அந்த படத்தை தொடர்ந்து மற்றொரு படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

நடிகர் தனுஷ் (Dhanush) நடிப்பில் ஏற்கனவே, ஓடிடி தளத்தில் 'ஜகமே தந்திரம்' (Jagamea Thanthiram) திரைப்படம் வெளியான நிலையில், அந்த படத்தை தொடர்ந்து மற்றொரு படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திரையுலகில் ஆல்ரவுண்டர் என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்து விட்டார் நடிகர் தனுஷ். தமிழை தாண்டி, பாலிவுட், ஹாலிவுட் திரையுலகிலும் கலக்கி வருகிறார். அதே போல் நடிப்பு மட்டும் இன்றி, இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பல விதத்திலும் தன்னுடைய திறமையை நிரூபித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார்.

ஏற்கனவே தனுஷ் நடிப்பில், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'ஜகமே தந்திரம்' திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியான நிலையில், இந்த படத்தை தொடர்ந்து மற்றொரு படமும் நெட் ஃபிளிக்சில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட் திரையுலகில் தனுஷ் நடிகர் அக்ஷய்குமாருடன் இணைந்து நடித்துள்ள 'அட்ராங்கி ரே' படம் தான் அடுத்து நெட் ஃபிளிக்ஸ்ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாம். இந்த படத்தில் நடிகர் தனுஷுக்கு  ஜோடியாக, பாலிவுட் நடிகர் சைப் அலிகான் மகள், சாரா அலி கான் நடித்துள்ளார். மிக முக்கிய கதாபாத்திரத்தில் அக்ஷய்குமார் நடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் அனைத்தும் முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் மும்முரமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.

ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு, இசை புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் டிசம்பர் மாதம் நெட் ஃபிளிக்ஸ் ஓடிடியில் தளத்தில் வெளியாக உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் இது குறித்து எவ்வித அதிகார பூர்வ அறிவிப்பும் வெளியாவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் ஆரோக்கியமும்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!