நயன் - விக்கியை தொடர்ந்து இன்று திருப்பதிக்கு சென்ற நடிகர் பிரபு! இது தான் வேண்டுதலா? பெரிய மனசு தான்!!

Published : Sep 28, 2021, 05:16 PM IST
நயன் - விக்கியை தொடர்ந்து இன்று திருப்பதிக்கு சென்ற நடிகர் பிரபு! இது தான் வேண்டுதலா? பெரிய மனசு தான்!!

சுருக்கம்

இது புரட்டாசி மாதம் என்பதால், ஏழுமலையானின் பக்தர்களாகிய பொதுமக்கள், மற்றும் பிரபலங்கள் தொடர்ந்து திருப்பதிக்கு சென்று வரும் நிலையில், தற்போது நடிகர் பிரபு (Prabhu) தன்னுடைய குடும்பத்துடன், சுவாமி தரிசனம் செய்துள்ளார்.  

இது புரட்டாசி மாதம் என்பதால், ஏழுமலையானின் பக்தர்களாகிய பொதுமக்கள், மற்றும் பிரபலங்கள் தொடர்ந்து திருப்பதிக்கு சென்று வரும் நிலையில், தற்போது நடிகர் பிரபு  தன்னுடைய குடும்பத்துடன், சுவாமி தரிசனம் செய்துள்ளார்.

மேலும் செய்திகள்: இவ்வளவு சீக்கிரம் இதை நான் எதிர்பார்க்கவில்லை..!! வைரலாகும் சமந்தா வெளியிட்ட புகைப்படம்..!!

கடந்த வாரம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டு மகள்களும் திடீர் என திருப்பதிக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்த, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதை தொடர்ந்து, நேற்றைய தினம் கூட கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திருப்பதி கோவிலுக்குதன்னுடைய காதலர் விக்னேஷ் சிவனுடன் வந்திருந்தார்.

இருவரும் கையை விடாமல் இறுக்கி பிடித்தபடி, வெளியே வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வைரலாக பார்க்கப்பட்டு வந்தது. இவரை தொடர்ந்து நடிகர் பிரபு இன்று திருப்பதி கோவிலுக்கு சென்று மக்களின் நலனுக்காக வேண்டி கொண்டுள்ளார்.

மேலும் செய்திகள்: பற்றி எரியும் சமந்தாவின் விவாகரத்து விவகாரம்.!! இப்படி ஒரு அதிரடி முடிவா? ஆடி போன ரசிகர்கள்..!!

தன்னுடைய மனைவி, மகன், மருமகள் என ஒட்டுமொத்த குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த நடிகர் பிரபு, பின்னர் வெளியே வந்த போது, செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, 'கொரோனாவில் இருந்து சீக்கிரம் அனைத்து மக்களும்
 விடுபட வேண்டும் என்பதற்க திருப்பதிக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளதாக தெரிவித்தார்.  எப்போது திருப்பதிக்கு வந்தாலும் நல்ல தரிசனம் கிடைக்கும் அதே போல் இம்முறையும் நல்ல தரிசனம் கிடைத்தாதாகவும் தெரிவித்தார். தனக்கென்று எதுவும் வேண்டி கொள்ளாமல் மக்களுக்காக இவர் வேண்டி கொண்டுள்ளது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அண்ணா நகர் சொத்தை ரூ. 35 கோடிக்கு விற்றார் விஜய்? அரசியலுக்காகத் திரட்டப்படும் பிரம்மாண்ட நிதி?
Bhishmar Review : தயான் சீனிவாசனின் 'பீஷ்மர்' படம் அடிபொலியாக இருந்ததா? இல்லையா? விமர்சனம் இதோ