
கும்பகோணம், மதுரையில் உள்ள சாத்தான்களை ஒழிக்க வேண்டும் என்றால் தாராளமாக நிதி கொடுங்கள் என்று மனோபாலா பேசும் வசனம் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
பழைய வண்ணாரப்பேட்டை, திரெளபதி ஆகிய படங்களின் மூலம் கவனத்தை ஈர்த்த மோகன் ஜி இயக்கியுள்ள புதிய படம் ருத்ர தாண்டவம். திரெளபதியில் நாயகனாக அறிமுகமாகிய தல அஜித்தின் மைத்துனர் ரிச்சர்டு இப்படத்திலும் ஹீரோவாக நடித்துள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான தர்ஷா நாயகியாகவும், இயக்குனர் கவுத வாசுதேவ் மேனன், ராதாரவி, தம்பி ராமையா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.
திரெளபதி படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்த நிலையில் ருத்ர தாண்டவும் திரைக்கு வரும் முன்னரே சர்ச்சைகளை உண்டாக்கி இருக்கிறது. மதமாற்றத்தில் ஈடுபடும் கும்பல் குறித்து திரைப்படம் பேசுவதாக இயக்குனர் கூறியுள்ளார். சமீபத்தில் வெளியான டிரெய்லரும் அதை உறுதிப்படுத்த கிறிஸ்தவ அமைப்புகள் போர்க்கொடி தூக்கினர்.
இந்தநிலையில் படத்தின் சில நிமிட காட்சிகளான ஸ்னீக் பீக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. செவ்வாய் கிழமையில் எழுப்புதல் கூட்டத்தை நடத்தும் மனோபாலா, சாத்தான்களை அழிக்க தாராளமாக நிதி தர வேண்டும். அடுத்த கூட்டம் வெள்ளிக்கிழமை நடக்கும் என்ற வசனங்கள் ஸ்னீக் பீக்கில் இடம்பெற்றுள்ளன.
கிறிஸ்தவர்களின் மதக்கூட்டங்களை நேரடியாக தாக்கி காட்சிகள் இடம்பெற்றிருப்பதால் ருத்ர தாண்டவத்திற்கு எதிர்ப்புகள் மேலும் வலுக்கும் என்று சொல்லப்படுகிறது. அதேவேளையில் இந்து அமைப்புகள், ஒரு சில அரசியல் கட்சிகள் ருத்ர தாண்டவத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். அக்டோபர் 2-ஆம் தேதி உலகமெங்கும் ருத்ர தாண்டவம் திரைக்கு வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.