
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்க, தானு தயாரித்து மாபெரும் வசூலை வாரிக் குவித்த படம் கர்ணன்.
பரியேறும் பெருமாள் என்ற முதல் திரைப்படம் மூலம் தனக்கான இடத்தை பதிவு செய்த மாரி செல்வராஜ், அடுத்த படத்தில் முன்னணி நடிகர் தனுஷை ஒப்பந்தம் செய்தார். கலைப்புலி தானு தயாரிப்பில் வெளியானது கர்ணன் திரைப்படம். தனுஷ் உள்ளிட்ட படத்தில் நடித்த அனைவருக்கும் கர்ணன் பாராட்டு மாலைகளை வாரிக் குவித்தது. வியாபார ரீதியாக கர்ணன் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.
கர்ணன் மாபெரும் வெற்றி பெற்றதால் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மேலும் ஒரு படம் நடிக்க தனுஷ் சம்மதம் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் தனுஷ் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் செய்தி வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் வெளியாகும் சர்வதேச நாளிதழான நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை பட்டியலிட்டுள்ள உலகின் தலைச்சிறந்த 5 படங்களில் கர்ணன் இடம்பிடித்துள்ளது.
இந்த மகிழ்ச்சிகரமான செய்தியை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தனுஷ், இயக்குனர் மாரி செல்வராஜ் ஆகியோருக்கு இத்தகைய கவுரவம் புதிய ஊக்கத்தை கொடுத்துள்ளது. இப்படியொரு படத்தை தயாரித்ததற்காக பெருமை கொள்வதாக தயாரிப்பாளர் தானு கூறியுள்ளார். தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணியின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.