எளிமையாக நடந்த நடிகரின் திருமணம்! திருமண பணம் மொத்தத்தையும் கொரோனா நிதிக்கு கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம்!

By manimegalai aFirst Published Apr 27, 2020, 3:11 PM IST
Highlights

நடிகர் ஒருவர், அவருடைய காதலியை மிகவும் எளிமையாக திருமணம் செய்துகொண்டது மட்டும் இன்றி, திருமணத்திற்காக வைத்திருந்த மொத்த பணத்தையும் கொரோனா தடுப்பு பணிக்காக கொடுத்த நெகிழவைத்துள்ளார்.
 

நடிகர் ஒருவர், அவருடைய காதலியை மிகவும் எளிமையாக திருமணம் செய்துகொண்டது மட்டும் இன்றி, திருமணத்திற்காக வைத்திருந்த மொத்த பணத்தையும் கொரோனா தடுப்பு பணிக்காக கொடுத்த நெகிழவைத்துள்ளார்.

பிரபல மலையாள நடிகர் மணிகண்டன் ஆச்சாரி. இவர் கடந்த சில வருடங்களாக, அஞ்சலி என்கிற பெண்ணை காதலித்து வந்தார். இந்நிலையில் இவர்களின் காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து, இவர்களுக்கு கடந்த 6 மாதத்திற்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

மேலும் செய்திகள்: துல்கர் மன்னிப்பு அவசியமில்லை..! அவர் தான் கேட்க வேண்டும்! பிரபாகரன் பெயர் சர்ச்சை: அதிரடி காட்டும் பிரபலம்!
 

மேலும், இன்று இவர்களுடைய திருமணத்தை நடத்த பெற்றோர் தேதி குறித்திருந்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக, கொரோனா பிரச்சனையின் காரணமாக பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டிருந்த இவர்களது திருமணத்தை எளிமையாக நடத்தும் சூழ்நிலை உருவாகிவிட்டது.

எனவே, தங்கள் வீட்டுக்கு அருகாமையில் உள்ள கோவிலில், மணிகண்டன் ஆச்சாரி குடும்பத்தினர் திருமணத்தை மிகவும் எளிமையாக நடத்த திட்டமிட்டனர். அதன் படி, நெருங்கிய குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொள்ள இவர்கள் திருமணம் தற்போது நடந்து முடிந்துள்ளது.

மேலும் செய்திகள்: ஏழைகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அமீர் கான்... கோதுமை மாவு பாக்கெட்டுக்குள் காத்திருந்த நெகிழ்ச்சியான விஷயம்!
 

மேலும் திருமண நிகழ்ச்சியை மிகவும் பிரமாண்டமாக நடத்தவேண்டும் என திட்டமிட்டிருந்த இவர்கள், திருமண நிகழ்ச்சிக்காக சேர்த்து வைத்திருந்த மொத்த பணத்தையும் கொரோனா தடுப்பு நிதிக்கு கொடுத்து நெகிழவைத்துள்ளார். 

நடிகர் மணிகண்டனின் இந்த செயலுக்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு பக்கம் வாழ்த்தும் மறுபக்கம் பாராட்டுகளும் குவித்தவண்ணம் உள்ளது. இது குறித்து நடிகர் மணிகண்டன் கூறியபோது, திருணம் பிரமாண்டமாக நடைபெறவில்லை என்று எந்த வருத்தமும் இல்லை. குறிப்பிட்ட நேரத்தில் திருமணம் நடந்துள்ளது என்று மகிழ்ச்சியாக உள்ளதாகவும். திருமணத்திற்கு வைத்திருந்த பணத்தை கொரோனா பணிக்கு கொடுத்துள்ளது மேலும் மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.

click me!