ஜோதிகாவை அடுத்து சந்தானம்.... டிஜிட்டலில் ரிலீஸ் ஆகிறதா சர்வம் சுந்தரம்...??

By Kanimozhi PannerselvamFirst Published Apr 27, 2020, 1:58 PM IST
Highlights

அதன் பிறகு ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் போடப்பட்ட அந்த படத்தை அமேசான் பிரைம் நிறுவனத்தில் விற்க தயாரிப்பாளர் தரப்பு பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் திரைப்படம் அமேசானில் வெளியாக உள்ளதாகவும், தயாரிப்பு செலவை விட இருமடங்கு அதிக லாபத்திற்கு படத்தை விற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. அப்படி ரிலீஸ் செய்தால் சூர்யாவின் எந்த படத்தையும் தியேட்டரில் வெளியிடமாட்டோம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் ராகவா லாரன்ஸ் இந்தியில் இயக்கிய லக்‌ஷ்மி பாம் படத்தை டிஜிட்டலில் ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதையடுத்து ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நடித்துள்ள லட்சுமி பாம் திரைப்படமும் டிஜிட்டலில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் மே 22ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை டிஜிட்டலில் வெளியிட பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதையும் படிங்க:  

லாக்டவுன் காரணமாக சினிமா தொடர்பான அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளதால், லக்‌ஷ்மி பாம் படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதனால் சொன்ன தேதிக்கு படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த படத்தை Disney+Hotstaryy-யில் ரிலீஸ் செய்வது பற்றி பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: டாப் ஆங்கிளில் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த யாஷிகா ஆனந்த்... படு பயங்கர ஓபனால் நிலைகுலைந்த நெட்டிசன்கள்...!

இந்நிலையில் சந்தானம், வைபவி சாண்டில்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள சர்வர் சுந்தரம் திரைப்படத்தை OTT முறையில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2016ம் ஆண்டே சர்வர் சுந்தரம் திரைப்படம் தயாராகிவிட்டது. ஆனால் பைனான்ஸ் பிரச்சனை காரணமாக படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் போனது. அந்த பிரச்சனைகளில் எல்லாம் மீண்டு ஜனவரி 31ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஒரே தேதியில் சந்தானத்தின் டகால்டி, சர்வர் சுந்தரம் திரைப்படத்தை வெளியிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. 

இதையும் படிங்க: “குடும்பத்தினரை கேவலப்படுத்துவது நல்லது இல்ல”... நாம் தமிழர் தம்பிகளை எச்சரித்த துல்கர் சல்மான்...!

இதையடுத்து இருதரப்பு தயாரிப்பாளர்கள் இடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் டகால்டி படத்தை மட்டும் ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன் பிறகு ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் போடப்பட்ட அந்த படத்தை அமேசான் பிரைம் நிறுவனத்தில் விற்க தயாரிப்பாளர் தரப்பு பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தியேட்டர் உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் இடையேயான பிரச்சனை பூதாகரமாக வெடிக்க வாய்ப்புள்ளது. 

click me!