“குடும்பத்தினரை கேவலப்படுத்துவது நல்லது இல்ல”... நாம் தமிழர் தம்பிகளை எச்சரித்த துல்கர் சல்மான்...!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 27, 2020, 12:30 PM IST
Highlights

இந்நிலையில் அந்த படத்தில் பிரபாகரன் பெயரை பயன்படுத்தியதற்கான காரணத்தை கூறியுள்ள துல்கர் சல்மான், தமிழக மக்களிடம் மன்னிப்பும் கோரியுள்ளார். 
 

கேரள ரசிகர்களை மட்டுமல்லாது, தனது அசத்தலான நடிப்பால் எக்கச்ச தமிழக ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்து வைத்துள்ளார் இளம் நடிகர் துல்கச் சல்மான். மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் மகனாக இருந்தாலும் நடிப்பில் தனக்கு என தனி ஸ்டைல் மற்றும் நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். துல்கர் சல்மான் தயாரித்து நடித்த “வரனே அவஷ்யமுண்டு” திரைப்படம் கடந்த 9ம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் மும்பையைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவரின் புகைப்படத்தை பயன்படுத்திய விவகாரம் சர்ச்சையை கிளப்பியது. அதற்காக துல்கர் சல்மான் மன்னிப்பு கோரினார். 

இந்நிலையில் அதே படத்தில் பிரபாகரன் பெயரை அவமதித்ததாக கூறி பிரச்சனை கிளம்பியுள்ளது. அந்த படத்தில் சுரேஷ் கோபி வளர்க்கும் நாயின் பெயர்  பிரபாகரன். காமெடி காட்சி ஒன்றில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பெயரை அவமதித்திருப்பதாக கூறி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அந்த படத்தில் பிரபாகரன் பெயரை பயன்படுத்தியதற்கான காரணத்தை கூறியுள்ள துல்கர் சல்மான், தமிழக மக்களிடம் மன்னிப்பும் கோரியுள்ளார். 

We are gravely offended by the deliberate slander on our Tamil Leader Velupillai Prabhakaran and condemn the film makers of Malayalam movie . We demand apology from and the director Anoop Sathyan! pic.twitter.com/0v8t7iXUST

— Sunandha ThamaraiSelvan (@Sunandhaspeaks)

 

இதுகுறித்து துல்கர் சல்மான் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “வரனே அவஷ்யமுண்டு” படத்தில் பிரபாகரன் பெயரை வேண்டுமென்றே பயன்படுத்தி தமிழக மக்களை அவதித்துள்ளதாக பலரும் என்னிடம் தெரிவித்தனர். ஆனால் உள்நோக்கத்தோடு அப்படி செய்யவில்லை. அந்த காமெடி பழைய மலையாள படமான “பட்டன பிரவேஷம்” என்ற படத்தில் இடம் பெற்ற காட்சியை கொண்டு உருவாக்கப்பட்டது. அதுமட்டுமில்லாது கேரளாவில் பிரபலமான மீம்ஸும் கூட. ஆனால் சிலர் வேண்டுமென்றே வெறுப்பை பரப்ப முயற்சிக்கிறார்கள். 

To all those who were offended. I apologise. And I also apologise on behalf of and ! pic.twitter.com/erbjftlNbj

— dulquer salmaan (@dulQuer)

என்னையும், இயக்குநர் அனுப்பையும் வெறுப்பதை ஏற்றுக்கொள்ள முடியும், ஆனால் நம் அப்பாக்களையும், சீனியர் நடிகைகளையும் அவமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த காட்சி அவமதிப்பதாக எண்ணும் அனைத்து தமிழக மக்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். சிலர் மோசமான வார்த்தைகளை பயன்படுத்துவதுடன், எங்களது குடும்ப உறுப்பினர்களையும் கேவலமாக பேசுவது  நல்லது அல்ல. இது நடந்திருக்க வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார். 

To all those who were offended. I apologise. And I also apologise on behalf of and ! This is the reference to the joke in question. The 1988 film “Pattana Pravesham”. pic.twitter.com/7fQrrJRU7u

— dulquer salmaan (@dulQuer)

மேலும் சத்யன் இயக்கிய “பட்டன பிரவேஷம்”  படத்தில் இடம் பெற்ற அந்த காட்சியையும் துல்கர் சல்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அப்பா சத்யன் இயக்கிய அந்த காட்சியை வைத்து தான் மகன் அனுப் சத்யன், துல்கர் சல்மான் படத்தில் அப்படியொரு காமெடி காட்சியை சித்தரித்தது குறிப்பிடத்தக்கது. 

click me!