Kamal Haasan at Cannes 2022 : கேன்ஸ் பட விழாவில் கெத்தாக எண்ட்ரி கொடுத்த கமல்... வைரலாகும் புகைப்படங்கள்

Published : May 18, 2022, 09:14 AM ISTUpdated : May 18, 2022, 09:38 AM IST
Kamal Haasan at Cannes 2022 : கேன்ஸ் பட விழாவில் கெத்தாக எண்ட்ரி கொடுத்த கமல்... வைரலாகும் புகைப்படங்கள்

சுருக்கம்

Kamal Haasan at Cannes 2022 : நடிகர் கமல்ஹாசன் இன்று கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றுள்ளார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

உலகப்புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா தற்போது பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. உலகெங்கிலும் இருந்து ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ளும் இந்த விழாவில், இந்த ஆண்டு இந்திய திரையுலகைச் சேர்ந்த ஏராளமான நடிகர், நடிகைகள் பங்கேற்றுள்ளனர்.

குறிப்பாக இதில் ஏ.ஆர்.ரகுமானின் லே மஸ்க் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. அதேபோல் மாதவன் இயக்கி உள்ள ராக்கெட்ரி படமும் திரையிடப்பட உள்ளது. இதுதவிர பா.இரஞ்சித்தின் வெட்டுவம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் நாளை இந்த விழாவில் வெளியிடப்பட உள்ளது. மேலும் நடிகைகள் தமன்னா, ஊர்வசி ரவ்துலா ஆகியோரும் இந்த விழாவில் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் இன்று கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றுள்ளார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கெத்தான தோற்றத்துடன் நடிகர் கமல்ஹாசன் அந்த விழாவில் பங்கேற்றபோது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படத்தின் டிரைலர் திரையிடப்பட உள்ளது. விக்ரம் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3-ந் தேதி உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... கோழிக்கு ஒரு நியாயம்.. மாட்டுக்கு ஒரு நியாயமா? வெட்ட கூடாதுனா எதையும் வெட்ட கூடாது- நடிகை நிகிலா விமல் காட்டம்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?