Shikhar Dhawan : சினிமாவில் எண்ட்ரி கொடுக்கும் ஷிகர் தவான்... IPL முடிந்ததும் ஆக்‌ஷன் ஹீரோவாக களமிறங்க திட்டம்

Published : May 17, 2022, 03:56 PM IST
Shikhar Dhawan : சினிமாவில் எண்ட்ரி கொடுக்கும் ஷிகர் தவான்... IPL முடிந்ததும் ஆக்‌ஷன் ஹீரோவாக களமிறங்க திட்டம்

சுருக்கம்

Shikhar Dhawan : இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரரும், ஐபிஎல்லில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருபவருமான ஷிகர் தவான் சினிமாவில் நடிகராக அறிமுகமாக உள்ளாராம்.

கிரிக்கெட் வீரர்கள் சினிமாவில் நடிப்பது என்பது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. சடகோபன் ரமேஷ், ஸ்ரீசாந்த் ஆகியோர் ஏற்கனவே சினிமாவில் நடித்துள்ளனர். அதேபோல் தோனியும் ஒரு அனிமேஷன் கதையில் நாயகனாக நடிக்கிறார். அந்த வகையில் விரைவில் இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் ஷிகர் தவானும் சினிமாவில் அறிமுகமாக உள்ளாராம்.

அவர் தற்போது இந்தி படம் ஒன்றில் நாயகனாக நடித்து வருகிறாராம். அந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதாகவும், விரைவில் அவர் அறிமுகமாகும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷிகர் தவான், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு தனது நடிப்பு திறமையை ஏற்கனவே வெளிப்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷிகர் தவான் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். மயங்க் அகர்வால் தலைமையிலான இந்த அணியில் துவக்க வீரராக களமிறங்கும் தவான், இதுவரை 3 அரை சதங்கள் அடித்துள்ளார். அதுமட்டுமின்றி இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளார்.

இந்த தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி 13 போட்டிகள் விளையாடி அதில் 6-ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு மங்கி வருகிறது. அடுத்து எஞ்சியுள்ள ஒரு போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி ஜெயித்தாலும், எஞ்சியுள்ள அணிகளின் முடிவுகளை பொருத்தே இந்த அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு உறுதி செய்யப்படும்.

இதையும் படியுங்கள்... Chethana Raj Death : பிளாஸ்டிக் சர்ஜரி செய்த 21 வயது சீரியல் நடிகை மரணம்.. அழகுக்காக உயிரை பறிகொடுத்த பரிதாபம்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?