Chethana Raj Death : பிளாஸ்டிக் சர்ஜரி செய்த 21 வயது சீரியல் நடிகை மரணம்.. அழகுக்காக உயிரை பறிகொடுத்த பரிதாபம்

Published : May 17, 2022, 03:17 PM ISTUpdated : May 17, 2022, 03:23 PM IST
Chethana Raj Death : பிளாஸ்டிக் சர்ஜரி செய்த 21 வயது சீரியல் நடிகை மரணம்.. அழகுக்காக உயிரை பறிகொடுத்த பரிதாபம்

சுருக்கம்

Chethana Raj Death : பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்ட நடிகை திடீரென மரணமடைந்திருப்பது கன்னட சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த துயரத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

கீதா, டோரேசனி போன்ற கன்னட சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் சேத்தனா ராஜ். 21 வயதாகும் இவர் அறுவை சிகிச்சை மூலம் சற்று குறைக்க முடிவு செய்துள்ளார். இந்த விஷயத்தை பெற்றோருக்கு தெரியாமல் செய்து முடிக்க வேண்டும் என முடிவு செய்த அவர், பெங்களூருவில் உள்ள ஷெட்டி மருத்துவமனைக்கு நேற்று சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

அங்கு பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் கொழுப்பை குறைக்க அறிவுறுத்திய மருத்துவர்கள், அதற்கான சிகிச்சையை அவருக்கு கொடுத்துள்ளனர். சிகிச்சையின் போது அவர் சுயநினைவை இழந்ததால் பதற்றமடைந்த மருத்துவர்கள் அவரை அருகில் உள்ள காடே மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறி அங்கு அனுமதித்துள்ளனர்.

இதையடுத்து ஐசியூவில் வைத்து 45 நிமிடம் அவசர சிகிச்சை அளித்தபோது அவர் உயிர் பிழைக்கவில்லை. இதையடுத்து அவர் இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர். ஷெட்டி மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையும், அலட்சியமுமே தங்களது மகளின் மரணத்திற்கு காரணம் என சேத்தனாவின் பெற்றோர் குற்றம் சாட்டி உள்ளனர்.

பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்ட நடிகை திடீரென மரணமடைந்திருப்பது கன்னட சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த துயரத்தையும் ஏற்படுத்தி உள்ளது. நடிகை சேத்தனா ராஜின் மறைவுக்கு அவரது ரசிகர்களும், கன்னட திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... Bharathi kannamma : பாரதி கண்ணம்மா சீரியலில் புது ஹீரோவாக களமிறங்கும் பிக்பாஸ் பிரபலம்... யார் தெரியுமா?

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!
பெத்த மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியை காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி!