
சினிமா பிரபலங்களை விட சின்னத்திரை பிரபலங்களுக்கு மக்கள் மத்தியில் அதிக மவுசு உண்டு. சீரியல்கள் தினந்தோறும் ஒளிபரப்பப்படுவதால் அதில் நடிக்கும் நடிகர், நடிகைகளை தங்கள் வீட்டில் ஒருவராக மக்கள் பார்த்து வரும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த தொடர்களில் பாரதி கண்ணம்மா சீரியலும் ஒன்று.
கடந்தாண்டு வரை டி.ஆர்.பி.யில் முதலிடத்தில் இருந்த இந்த தொடர், அதிலிருந்து அடுத்தடுத்து முக்கிய நடிகர், நடிகைகள் விலகியதன் காரணமாக கடும் சரிவை சந்தித்தது. குறிப்பாக இதில் கண்ணம்மாவாக நடித்த ரோஷினிக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே இருந்தது. அவர் விலகியதை அடுத்து அவருக்கு பதிலாக வினுஷா என்பவர் தற்போது கண்ணம்மாவாக நடித்து வருகிறார்.
இதனிடையே இதில் பாரதியாக நடித்து வரும் அருண் பிரசாத்தும் விரைவில் விலக உள்ளதாக கூறப்படுகிறது, இதனால் அடுத்த பாரதியாக யார் நடிக்கப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பரும், பிக்பாஸ் பிரபலமுமான சஞ்சீவ், பாரதியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே பல்வேறு சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் என்பதால் அவர் இந்த தொடருக்கு பொருத்தமாக இருப்பார் எனக் கருதி ஒப்பந்தம் செய்துள்ளனர். அவரின் வருகைக்கும் பின் அந்நிகழ்ச்சியின் டி.ஆர்.பி மீண்டும் டாப்புக்கு வருமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்... KGF 2 : ‘கே.ஜி.எஃப் 2’ படம் பார்த்து மெர்சலான இயக்குனர் ஷங்கர்... ‘பெரியப்பா’ அனுபவம் வேறலெவல் என புகழாரம்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.