Captain : கமலின் விக்ரமை தொடர்ந்து கேப்டன் படத்தை தட்டித்தூக்கிய உதயநிதி.. ரிலீஸ் தேதியுடன் வந்த மாஸ் அப்டேட்

By Asianet Tamil cinema  |  First Published May 17, 2022, 10:02 AM IST

Captain : ரஜினியின் அண்ணாத்த, விஜய்யின் பீஸ்ட், கமலின் விக்ரம் என தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்களை கைப்பற்றி வரும் உதயநிதி, தற்போது மேலும் ஒரு முன்னணி நடிகரின் படத்தை கைப்பற்றி உள்ளார்.


நடிகரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் மூலம் படங்களை தயாரித்தும், வெளியிட்டும் வருகிறார். குறிப்பாக கடந்தாண்டு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிவாகை சூடிய பின்னர், தமிழ் சினிமாவில் உதயநிதியின் ஆதிக்கம் அதிகளவில் உள்ளது.

கடந்த ஓராண்டாக தமிழ் சினிமாவில் வெளியான பெரிய நடிகர்களின் படங்கள் அனைத்தையும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் வெளியிட்டுள்ளது. சமீபத்தில் கமலின் விக்ரம் படத்தின் ரிலீஸ் உரிமையையும் உதயநிதி தான் கைப்பற்றி இருந்தார். அவர் நடிகர் கமல்ஹாசனை மிரட்டி அந்தபடத்தை வாங்கியதாக சர்ச்சையும் எழுந்தது.

Tap to resize

Latest Videos

இதற்கெல்லாம் விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் முற்றுப்புள்ளி வைத்த உதயநிதி, கமல்ஹாசனை யாரும் மிரட்ட முடியாது. மிரட்டினாலும் பயப்படும் ஆள் அவர் கிடையாது என்று அதில் உதயநிதி பேசி இருந்தார். இந்நிலையில், மேலும் ஒரு பிரபல நடிகரின் படத்தின் ரிலீஸ் உரிமையை கைப்பற்றி உள்ளார் உதயநிதி.

அதன்படி சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகி உள்ள கேப்டன் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மேலும் இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 8-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்... sarika : 60 வயதில் 30 வயது இளைஞருடன் மலர்ந்த காதலால் வில்லங்கத்தில் சிக்கிய கமலின் முன்னாள் மனைவி

click me!