sarika : நடிகை சரிகா நடித்துள்ள 'மாடர்ன் லவ் மும்பை' என்கிற ஆந்தாலஜி படம் இந்தியில் வெளியாகி உள்ளது. காதலை மையமாக வைத்து 6 வெவ்வேறு குறும்படங்களைக் கொண்டுள்ள இந்த ஆந்தாலஜி படம் வில்லங்கமான கதையம்சத்தை கொண்டுள்ளது.
நடிகை சரிகா கடந்த 1988-ம் ஆண்டு நடிகர் கமல்ஹாசனை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு சுருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் ஆகிய இரு மகள்கள் உள்ளனர். அவர்கள் இருவரும் தற்போது சினிமாவில் பிசியான நடிகைகளாக வலம் வருகின்றனர். திடீரென ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கமல்ஹாசன் - சரிகா தம்பதி கடந்த 2004-ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
பெற்றோர் பிரிந்தபோதும் நடிகைகள் சுருதிஹாசனும், அக்ஷராவும் தொடர்ந்து இருவர் மீது அன்பு செலுத்தி வருகின்றனர். சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை சரிகா, தான் கொரோனா ஊரடங்கு சமயத்தில் பணத்துக்காக மிகவும் கஷ்டப்பட்டதாகவும், சீரியலில் நடித்து அதன் மூலம் வரும் பணம் மூலம் தனது அன்றாட வாழ்க்கையை நடத்தி வந்ததாக கூறி இருந்தார்.
இந்நிலையில், நடிகை சரிகா நடித்துள்ள 'மாடர்ன் லவ் மும்பை' என்கிற ஆந்தாலஜி படம் இந்தியில் வெளியாகி உள்ளது. காதலை மையமாக வைத்து 6 வெவ்வேறு குறும்படங்களைக் கொண்டுள்ள இந்த ஆந்தாலஜி படம் வில்லங்கமான கதையம்சத்தை கொண்டுள்ளது. அதில் சரிகா நடித்துள்ள குறும்படம் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி உள்ளது.
ஏனெனில் அந்த குறும்படத்தில் 60 வயது பெண்ணாக நடித்துள்ள சரிகாவை 30 வயது இளைஞர் ஒருவர் காதலிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. முதலில் சரிகா இதை கண்டித்தாலும், பின்னர் அவருக்கும் இதில் விருப்பம் உள்ளதுபோல் காட்சிப்படுத்தி உள்ளதால் இந்த ஆந்தாலஜி படம் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இதையும் படியுங்கள்... விமானப்படையினரிடம் சிக்கிய விஜய்... ‘பீஸ்ட்’ படத்தின் லாஜிக் ஓட்டைகளை சுட்டிக்காட்டி வறுத்தெடுத்த ரியல் ஹீரோஸ்