Ajithkumar : வட இந்தியாவில் பைக் ரைடிங் செய்துவரும் நடிகர் அஜித், அங்குள்ள புத்தர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
பைக் ரைடிங் மீது தீவிர ஆர்வம் கொண்டவர் நடிகர் அஜித். ஏதேனும் ஓய்வு நேரம் கிடைத்தால் போது உடனடியாக நண்பர்களுடன் எங்காவது பைக்கை எடுத்துக் கொண்டு ட்ரிப் கிளம்பிவிடுவார். அந்த வகையில் தற்போது காஷ்மீர், லடாக் என வட இந்திய எல்லையில் உள்ள குளிர் பிரதேசங்களில் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஜாலியாக் பைக் ரைடிங் செய்து வருகிறார்.
இந்த பைக் ட்ரிப்பில் மலையாள நடிகை மஞ்சு வாரியரும் கலந்துகொண்டுள்ளார். ஏகே 61 படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்தபோது அவருடன் ஏற்பட்ட நட்பாலும், பைக் ரைடிங் மீது கொண்ட ஆர்வத்தாலும், ஜாலியாக பைக்கில் வலம் வருகிறார் மஞ்சு வாரியார். நடிகர் அஜித்தின் லாடாக் பைக் டிரிப்பின் போது எடுத்த புகைப்படங்களும் வீடியோக்களும் தினசரி வெளிவந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... ஆளே இல்லாமல் காத்துவாங்கும் தியேட்டர்கள்.. ஆனா வசூல் ரூ.250 கோடியா?- எல்லாம் பொய்.. வசமா சிக்கிய பிரம்மாஸ்திரா
அந்த வகையில் பைக் ரைடிங்கின் போது வட இந்தியாவில் உள்ள புத்தர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து உள்ளார் அஜித். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி சமூக வலைதளங்கள் செம்ம வைரல் ஆகி வருகிறது. ரைடிங் ஜாக்கெட் அணிந்தபடி அந்த கோவிலில் அஜித் வழிபாடு செய்யும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்று உள்ளன.
நடிகர் அஜித் தற்போது ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. எச்.வினோத் இயக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் பேங்காக்கில் நடக்க இருக்கிறது. அங்கு முக்கிய சண்டைக்காட்சியை படமாக்க இருக்கிறார்களாம். இதுதவிர விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62, சிறுத்தை சிவா இயக்கத்தில் ஏகே 63 என வரிசையாக படங்களை கைவசம் வைத்துள்ளார் அஜித்.
Exclusive Video. sir ❤️ pic.twitter.com/MHJQ26cL4F
— Ajith Network (@AjithNetwork)இதையும் படியுங்கள்... இன்னும் ஷூட்டிங்கே முடியல... அதற்குள் ரூ.180 கோடி வசூல்..! ரிலீசுக்கு முன்பே கல்லா கட்டிய விஜய்யின் ‘வாரிசு’