தல ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்.. விடாமுயற்சி அப்டேட் இருக்கட்டும்.. முதல்ல இதை படிங்க..

Published : Oct 02, 2023, 11:01 AM ISTUpdated : Oct 02, 2023, 11:32 AM IST
தல ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்.. விடாமுயற்சி அப்டேட் இருக்கட்டும்.. முதல்ல இதை படிங்க..

சுருக்கம்

நடிகர் அஜித் சமீபத்தில் சென்னை திரும்பிய நிலையில் விடாமுயற்சி படப்படிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

அஜித் நடிப்பில் வெளியான துணிவு படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என ஹெச். வினோத் – அஜித் கூட்டணியில் 3 படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கப்போவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகிய நிலையில்,அந்த படத்தின் இயக்குனர் யார் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்தது. இதை தொடர்ந்து  இயக்குனர் மகிழ் திருமேனி இந்த படத்தை இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த படத்திற்கு விடாமுயற்சி என்று பெயரிடப்பட்டது.

இதனிடையே அஜித் தனது உலக பைக் சுற்றுலாவை தொடர்ந்ததால் விடாமுயற்சி குறித்து எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இந்த நிலையில் நடிகர் அஜித் சமீபத்தில் சென்னை திரும்பிய நிலையில் விடாமுயற்சி படப்படிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

அந்த வகையில் தற்போது வரும் 4-ம் தேதி அஜித்தின் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்வேறு காரணங்களால் படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போய் கொண்டிருந்த சூழலில் தற்போது 4-ம் தேதி அஜர்பைஜானில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக படக்குழுவினர் அங்கு புறப்பட்டு சென்றனர். ஒரே கட்டமாக அங்கு ஷூட்டிங் நடத்தி முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து படத்தின் சில சண்டை காட்சிகளை துபாயில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

அய்யய்யோ இவரு பயங்கரமான ஆளாச்சே.. பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த டக்கர் எழுத்தாளர் - யார் இந்த பாவா செல்லத்துரை?

துபாயில் அஜித் பிரம்மாண்ட வீடு வாங்கி உள்ள நிலையில், புதிய அலுவலகமும் தொடங்கி உள்ளாராம். தனது சொந்த வீட்டிலிருந்து அஜித் இந்த ஷூட்டிங்கில் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது. இதனிடையே அஜித் துபாய் செட்டில் ஆக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல பத்திரிகையாளர் வலைபேச்சு ஆனந்தன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அஜித் துபாயில் செட்டில் ஆக உள்ளதாகவும், அதனால் தான் அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது என்று கூறியுள்ளார.

மேலும் அஜித் முழுமையாக அங்கு செட்டில் ஆகவில்லை என்றாலும், வருடத்தின் பாதி நாட்கள் அங்கேயே தங்கி இருக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் துபாயில் புதிய பிசினஸ் ஒன்றை அஜித் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. எனினும் இந்த தகவல்கள் எந்தளவு உண்மை என்பது தெரியவில்லை. அஜித்தின் அடுத்தடுத்த பட வேலைகளை பொறுத்தே இது உண்மையா என்பது தெரியவரும்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!