பைக் உலாவை தொடர்ந்து வைரலாகும் அஜித்தின் ரைபிள் கிளப் வீடியோ !

By Kanmani P  |  First Published Jul 27, 2022, 12:03 PM IST

சென்னை திரும்பி உள்ள இவரின் ஏர்போர்ட் வீடியோ நேற்று வைரலானது. இதில் அஜித் சற்று உடல் எடை அதிகரித்து காணப்பட்டதால் நடிகரை நெட்டிசன்கள் விமர்சித்து வந்தனர். 


அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் நடிகராக மட்டுமல்லாமல் பல துறைகளிலும் கைத்தேர்ந்தவராக இருக்கிறார். பைக், கார் ரேஸ்களில் ஈடுபடும் இவர் துப்பாக்கி சூடுதலிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளார். முன்னதாக நடைபெற்ற 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில்  6 பதக்கங்களை வென்று அசத்தியிருந்தால் அஜித்குமார் இந்த ஆண்டுக்கான போட்டிக்கும் தயாராகிவிட்டார்.

அவர் தற்போது திருச்சி துப்பாக்கி சுடுதல் க்ளப்பிற்கு வருகை தந்த வீடியோ தான் சமூக வலைதளத்தில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது. ரசிகர் ஒருவரால் எடுக்கப்பட்ட இந்த வீடியோ ட்ரெண்டாகி வருகிறது. இந்த வீடியோவில் அஜித் கிளப்பிற்குள் செல்லும் போது தனக்காக காத்திருக்கும் ரசிகர்களை நோக்கி திரும்பி வந்து கையசைக்கிறார்..இதனால் ரசிகர்கள் உற்சாகமாக கூச்சலிடுகின்றனர்.

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு... மினுமினுக்கும் உடையில் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ்..வைரலாகும் போட்டோஸ்..

Exclusive Vidoe Of Our At Trichy Rifle Club 🔥😎❤️

All The Best Chief 👍👍👍🤩🤩 pic.twitter.com/FVj2riHWFA

— AK FANS COMMUNITY™ (@TFC_mass)

மேலும் செய்திகளுக்கு..ராமமா? நாமமா? துல்கர் சல்மானை வம்பிழுத்த பயில்வான் ரங்கநாதன்..கடுப்பான நாயகன்

நடிகர் அஜித் தற்போது 61வது படத்தில் நடித்து வருகிறார் எச் வினோத் போனி கபூருடன் மூன்றாவது முறையாக கைகோர்த்துள்ள அல்டிமேட் ஸ்டாரின் இந்த படம் ஹைதராபாத்தில் படப்பிடிப்பை முடித்து சென்னை, பூனே ஆகிய செட்டியூல்களுக்கு ரெடியாகி வருகிறது. இந்த படத்தில் மஞ்சு வாரியர், வீரா, ஜான் கொக்கன், அஜய் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்துள்ளதாக தெரிகிறது.  இதற்கிடையே ஒரு மாத விடுமுறையை இங்கிலாந்தில் கழித்த அஜித் அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வீடியோக்களும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இதை அடுத்து சென்னை திரும்பி உள்ள இவரின் ஏர்போர்ட் வீடியோ நேற்று வைரலானது. இதில் அஜித் சற்று உடல் எடை அதிகரித்து காணப்பட்டதால் நடிகரை நெட்டிசன்கள் விமர்சித்து வந்தனர். 

மேலும் செய்திகளுக்கு....சமந்தாவை விவாகரத்து செய்ய நாக சைதன்யாவை அமீர் கான் வற்புறுத்தினார்: கேஆர்கே

🔥 pic.twitter.com/rLdxPcMhF3

— Cinema Updates (@mastervijay2020)

 

விரைவில் அஜித் 61 படத்தின் படப்பிடிப்பை முடித்து அடுத்த வருட ஜனவரியில் வெளியிடப்பட படக்குழு திட்டம் உள்ளது. ஏற்கனவே தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படப்பிடிப்பு தாமதமானதால் அடுத்த ஆண்டுதான் இந்த படத்தை திரையில் காணலாம் என தெரிகிறது. இந்த படத்தின் மூலம் முதன்முறையாக இசையமைப்பாளர் ஜிப்ரான் அஜித்துடன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!