
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் அல்டிமேட் என்னும் நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்ற பாலாஜி முருகதாஸ் தற்போது புதிததாக கார் வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் என்னும் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ்.
இதையும் படிங்க: மீண்டும் சட்ட சிக்கலில் ஜெய்பீம் இயக்குனர்...சரவணபவன் ராஜகோபாலின் வழக்கறிஞர் எச்சரிக்கை!
இவர் அந்த நிகழ்ச்சியில் வெற்றியை நூல் இழையில் தவறவிட்டு இரண்டாம் இடம் பிடித்திருந்தாலும் அதற்கு பின்னர் ஒளிபரப்பான பிக்பாஸ் அல்டிமேட் என்னும் நிகழ்ச்சியில் என்னும் நிகழ்ச்சியில் பங்கேற்று அதில் வெற்றி பெற்று டைடில் வின்னர் என்ற பெருமையை பெற்றார். இவர் சமூக வலைதளத்தில் எப்போதும் பல்வேறு பதிவுகளை போட்டு வருவது வழக்கம்.
இதையும் படிங்க: தளபதி விஜய்யின் 'வாரிசு' படத்தில் எஸ்.ஜே.சூர்யா.. என்ன ரோலில் தெரியுமா?
அந்த வகையில் தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். அதனை சமூக வலைதளத்தில் புதுசா மாடு வாங்கிருக்கோம் என்று கேப்சன் போட்டதுடன், வீடியோவிலும் புதுசா மாடு வாங்கிருக்கோம் என்ற ஆடியோவையும் இணைத்து அதனை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.