Share Market Today: சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை: வீழ்ச்சியில் சென்செக்ஸ், நிப்டி: பேடிஎம் பங்கு 9% சரிவு

By Pothy RajFirst Published Nov 17, 2022, 10:02 AM IST
Highlights

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் இன்று காலையில் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. பேடிஎம் பங்கு மதிப்பு 9 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்துள்ளன.

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் இன்று காலையில் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. பேடிஎம் பங்கு மதிப்பு 9 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்துள்ளன.

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் நேற்று காலையிலும் இதேபோன்று சரிவுடன் வர்தத்கத்தை தொடங்கின. ஆனால், சர்வதேச சூழலில் ஏற்பட்ட சாதகமான மாற்றம் காரணமாக வர்த்தகத்தின் இடையே ஏற்றம் பெற்ற வர்த்தகம் உச்சம் அடைந்தது. 

பங்குச்சந்தையில் நிலையற்றபோக்கு! கடைசி நேரத்தில் உயர்வில் முடிந்த சென்செக்ஸ், நிப்டி

குறிப்பாக சென்செக்ஸ் புள்ளிகள் இதுவரை இல்லாத வகையில் 62ஆயிரம் புள்ளிகள்வரை சென்று சரிந்தது, நிப்டியும் புதிய சாதனை படைத்தது. இறுதியாக சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கி ஏற்றத்துடன் வர்த்தகம் இருந்தது.

ஆனால், உக்ரைன், ரஷ்யா இடையே மீண்டும் போர் தொடங்குமா என்ற அச்சம், அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டிவீதத்தை குறைக்க வாய்ப்பில்லை எனும் தகவல் போன்றவை முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தின. இதனால் நேற்று அமெரிக்கப் பங்குசந்தையும் சரிவுடன் முடிந்தது. அதன் எதிரொலி ஆசியச் சந்தையிலும் காணப்பட்டது.

உலகின் பாதி சொத்துக்களை வைத்துள்ள அமெரி்க்க,சீன மக்கள்!இந்தியாவிடம் எவ்வளவு?ஸ்வாரஸ்ய அறிக்கை

ஆசிய, அமெரிக்கப் பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவு இந்தியச் சந்தையிலும் இன்று காலை முதல் எதிரொலித்து வருகிறது. வர்த்தகம் தொடங்கும் முன்பே மும்பை, தேசியப் பங்குச்சந்தையில் பங்குகள் சரிவை நோக்கி இருந்தன.

வர்த்தகம் தொடங்கியதிலிருந்து, பங்குச்சந்தையில் கடும் ஏற்ற இறக்கம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 68 புள்ளிகள் குறைந்து, 61,912 புள்ளிகளிலும், தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 36 புள்ளிகள் சரிந்து 18,372 புள்ளிகளும் வர்த்தகத்தை நடத்தி வருகின்றன. 

மும்பைப் பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனப் பங்குகளில் 14 நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்துள்ளன, 16 நிறுவனப் பங்குகள் விலை சரிந்துள்ளன. லார்சன் அன்ட் டூப்ரோ, ஆக்சிஸ் வங்கி, ஏசியன்பெயின்ட்ஸ், ஐடிசி, மாருதி, ஐசிஐசிஐ வங்கி, ரிலையன்ஸ் உள்ளிட்ட பங்குகள் மதிப்பு உயர்ந்துள்ளன. மற்ற நிறுவனப்ப ங்குகள் மதிப்பு சரிவில் உள்ளன.

EMI அதிகரிக்கும்!SBI வங்கியில் கடன் வாங்கியோருக்கு ஷாக்!MLCR 15 புள்ளிகள் உயர்வு

நிப்டியில், நிதிச்சேவை, எப்எம்சிஜி, மருந்துத்துறை ஆகிய துறைப்பங்குகள் மட்டும் ஏற்றத்துடன் உள்ளன.மாறாக, ஆட்டோமொபைல், தகவல்தொழில்நுட்பம், உலோகம் துறை பங்குகள் சரிவில் உள்ளன. குறிப்பாக பேடிஎம் நிறுவனப் பங்கு மதிப்பு காலை நேர வர்தத்கத்தில் 9 சதவீதம் வரை சரிந்துள்ளது. பேடிஎம் நிறுவனம் தனது பங்குகளில் 6 சதவீதத்தை ப்ளாக் டீல் மூலம் பரிமாற்ற முயன்றதால் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது.
 

click me!