தங்கம் விலை தொடர்ந்து 3வது நாளாக இன்றும் உயர்ந்துள்ளது.இந்த வாரம் தொடங்கியதிலிருந்து சவரனுக்கு ரூ.500க்கு மேல் உயர்ந்துள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து 3வது நாளாக இன்றும் உயர்ந்துள்ளது.இந்த வாரம் தொடங்கியதிலிருந்து சவரனுக்கு ரூ.500க்கு மேல் உயர்ந்துள்ளது.
தங்கம் விலை இன்று கிராமுக்கு 20 ரூபாயும், சவரனுக்கு 160 ரூபாயும் ஏற்றம் கண்டுள்ளது
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்கிழமை மாலை நிலவரப்படி, கிராம் ரூ.4,940 ஆகவும், சவரன், ரூ.39,520 ஆகவும் இருந்தது.
பங்குச்சந்தையில் சுணக்கம்! சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் வீழ்ச்சி: வாகனப் பங்கு ஏற்றம்
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(புதன்கிழமை) கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து ரூ.4,960 ஆகவும், சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து, ரூ.39 ஆயிரத்து 680 ஆகவும் ஏற்றம் கண்டுள்ளது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4,960க்கு விற்கப்படுகிறது.
தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,144 அதிகரித்தது, இந்த வாரமும் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.500க்கு மேல் உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1700 வரை ஏற்றம் கண்டுள்ளது.
தங்கம் விலை கிடுகிடு உயர்வு! நடுத்தரக் குடும்பத்தினருக்கு ஷாக்: இன்றைய நிலவரம் என்ன?
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது, தங்கம் வாங்க நினைக்கும் நடுத்தரக் குடும்பத்தினருக்கு, ஷாக் அளிக்கும் விதத்தில் இருக்கிறது.
நேட்டோ நாடான போலந்து மீது ரஷ்யா இன்று இரு ஏவுகணைகளை வீசியுள்ளது. இதன் தாக்கம், பின்விளைவுகள் குறித்து தெரியாததால் பங்குசந்தையும் எச்சரிக்கையுடன் நடந்து வருகிறது. ஒருவேளை உக்ரைன், ரஷ்யா மீண்டும் போரைத் தொடங்குமா என்ற கவலையும் சூழ்ந்துள்ளது.
உலகச் சூழல் ஒருவேளை பதற்றமடைந்தால், முதலீட்டை பாதுகாப்பாக வைக்க, தங்கத்தின் மீதான முதலீடு மேலும் அதிகரிக்கும் அப்போது தங்கத்தின் விலையில் கடும் ஏற்ற இறக்கம் இருக்கும் என சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
தங்கம் விலை தொடர் உயர்வு! சென்னையில் சவரனுக்கு 72 ரூபாய் அதிகரிப்பு: இன்றைய நிலவரம் என்ன?
வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ரூ.66.50 ஆக இருந்தநிலையில் ஒரு ரூபாய் சரிந்து, ரூ.67.50ஆகவும், கிலோவுக்கு ரூ.1000 குறைந்து, ரூ.67,500 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது