மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் இன்று சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன.
மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் இன்று சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன.
மும்பைப் பங்குச்சந்தை மற்றும் தேசியப் பங்குச்சந்தையில் நேற்று காலை நேர வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. ஆனால், பிற்பகலுக்குப்பின் வர்த்தகம் சூடுபிடித்து வர்த்தகம் உயர்வுடன் முடிந்தது.
EMI அதிகரிக்கும்!SBI வங்கியில் கடன் வாங்கியோருக்கு ஷாக்!MLCR 15 புள்ளிகள் உயர்வு
வர்த்தகம் நேற்று ஏற்றத்துடன் தொடங்கியநிலையில் இன்று காலை உயர்வுடன் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சரிவுடன் தொடங்கியுள்ளது. அமெரிக்காவின் பணவீக்கம் குறைந்துள்ளது, இந்தியாவில் பணவீக்கம் குறைந்துவருவது போன்ற பொருளாதாரக் காரணிகள் சாதகமாக இருந்தாலும், ரஷ்யாவின் திடீர் செயல்பாடு உலகளவில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
ரஷ்யாவிலிருந்து இரு ஏவுகணைகள், போலந்து நாட்டின் எல்லையில் விழுந்து இருவர் உயிரிழந்துள்ளனர். நேட்டா நாடுகளில் உறுப்பினராக இருக்கும் போலந்து மீது ரஷ்யாவின் திடீர் ஏவுகணை பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் மீண்டும் சூடுபிடிக்குமா என்ற அச்சம் எழுந்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அவசர ஆலோசனையும் நடத்தி வருகிறார். ஆசியப் பங்குச்சந்தைகளும் சர்வதேச சூழலைக் கருத்தில் கொண்டு சரிவில் முடிந்தன.
ஊசலாட்டத்தில் பங்குச்சந்தை: நிப்டி,சென்செக்ஸ் ஏற்றம்! ஆட்டோ, எரிவாயு,வங்கி பங்கு லாபம்
இதனால் காலை வர்த்தகம் தொடங்கியதும் வர்த்தகப் புள்ளிகள் சரிவுடன் தொடங்கின. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 124 புள்ளிகள் குறைந்து, 61,748 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 40 புள்ளிகள் குறைந்து, 18,362 புள்ளிகளில் வர்த்தகம் நடந்து வருகிறது.
மும்பை பங்குச்சந்தையில் உள்ள முக்கிய 30 நிறுவனப் பங்குகளில், 12 நிறுவனப் பங்குகள் மட்டுமே ஏற்றத்தில் உள்ளன, மற்ற 18 நிறுவனப் பங்குகள் சரிவில் உள்ளன. மாருதி, லார்சன்டூப்ரோ, ஆக்சிஸ் வங்கி, டைட்டன், இன்போசிஸ், சன்பார்மா, விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வில் உள்ளன.
நிப்டியில், எண்ணெய் மற்றும் எரிவாயு பங்குகள், எப்எம்சிஜி துறை பங்குகள், நிதித்துறை, உலோகம், ஐடி, ஆகிய பங்குகள் சரிவில் உள்ளன. ஆட்டமொபைல், பொதுத்துறை வங்கிகள், நுகர்வோர் பிரிவு துறை பங்குகள் லாபத்தோடு நகர்கின்றன.