Share Market Today: ஊசலாட்டத்தில் பங்குச்சந்தை: நிப்டி,சென்செக்ஸ் ஏற்றம்! ஆட்டோ, எரிவாயு,வங்கி பங்கு லாபம்

By Pothy Raj  |  First Published Nov 15, 2022, 3:56 PM IST

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தை இன்று காலை சரிவுடன் வர்த்தகத்தைத் தொடங்கி மாலையில் ஏற்றத்துடன் வர்த்தகத்தை முடித்துள்ளன. சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் உயர்வுடன் முடிந்தன.


மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தை இன்று காலை சரிவுடன் வர்த்தகத்தைத் தொடங்கி மாலையில் ஏற்றத்துடன் வர்த்தகத்தை முடித்துள்ளன. சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் உயர்வுடன் முடிந்தன.

அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்தபோதிலும் வட்டிவீதம் பெரிதாக உயராது என்ற எண்ணம் முதலீட்டாளர்கள் மத்தியில் இருக்கிறது. இந்தியாவில் அக்டோபர் மாதத்தில் பணவீக்கம்  குறைந்து 6.73 ஆகச் சரிந்துள்ளது. கச்சா எண்ணெய் விலையும் பேரலுக்கு 92 டாலராகக் குறைந்துள்ளது.

Tap to resize

Latest Videos

EMI அதிகரிக்கும்!SBI வங்கியில் கடன் வாங்கியோருக்கு ஷாக்!MLCR 15 புள்ளிகள் உயர்வு

இவை அனைத்தும் சாதகமானதாக இருந்தபோதிலும் வர்தத்கம் காலையில் இருந்தே சோர்வுடன் தொடங்கியது.

மிட்கேப், ஸ்மால் கேப் பங்குகளை விற்று லாபம் ஈட்டும் நோக்கில் முதலீட்டாளர்கள் இருந்ததால் காலையில் இருந்தே முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று லாபம் ஈட்டும் நோக்கில் இருந்தனர். ஆனால், பிற்பகலுக்குப்பின் சந்தையில் வர்த்தகம் சூடிபிடிக்கத் தொடங்கியது.

2-வது நாளாக பங்குச்சந்தையில் சரிவு: சென்செக்ஸ், நிப்டி வீழ்ச்சி: ஏற்றத்தில் ஆட்டோ பங்கு

முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்குகளை வாங்கியதால் சரிவில் இருந்த பங்குச்சந்தை ஏற்றத்தை நோக்கி நகர்ந்தது. பொதுத்துறை வங்கி, எண்ணெய் மற்றும் எரிவாயு பங்குகள், ஆட்டமொபைல் பங்குகள் ஆர்வத்துடன் வாங்கப்பட்டதால் வர்த்தகம் ஏறுமுகத்தில் இருந்தது.

 வர்த்கத்தின் இடையே மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் கடந்த ஓர் ஆண்டுக்குப்பின் உச்சகட்டமாக 61,955 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து பின் சரிந்தது. வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 248 புள்ளிகள் ஏற்றத்துடன், 61,872 புள்ளிகளில் வர்த்தகத்தை முடித்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 74 புள்ளிகள் உயர்ந்து, 18,403 புள்ளிகளில் முடிந்தது. 

மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனப் பங்குகளில் 8 நிறுவனப் பங்குகள் மட்டுமே விலை குறைந்தன. மற்றவை விலை அதிகரித்தன. ஐடிசி, ரிலையன்ஸ், டாடா ஸ்டீல், மாருதி, பஜாஜ்பின்சர்வ், கோடக்வங்கிஆகிய பங்குகள் விலை சரிந்தன.

எல்ஐசி(LIC) காப்பீடு நிறுவனத்தின் 2வது காலாண்டு லாபம் 10 மடங்கு அதிகரிப்பு! என்ன காரணம்?

மாறாக, பவர்கிரிட், ஐசிஐசிஐ வங்கி, மகிந்திரா அன்ட் மகிந்திரா, ஏசியன்பெயின்ட், டைட்டன், விப்ரோ, டெக் மகிந்திரா, ஹெச்டிஎப்சி ட்வின்ஸ், டிசிஎஸ், சன்பார்மா உள்ளிட்ட பங்குகள் விலை உயர்ந்தன.ஐசிஐசிஐ வங்கி பங்கு 2சதவீதம் உயர்ந்தது. 

நிப்டியில் எப்எம்சிஜி மற்றும் ரியல்எஸ்டேட் துறைப் பங்குகள் மட்டும் விலை குறைந்தன மற்ற துறைப் பங்குகள் அனைத்தும் விலை உயர்ந்தன. குறிப்பாக ஆட்டோமொபைல், வங்கி, எண்ணெய் மற்றும் எரிவாயுப் பங்குகள் அதிகஅளவில் லாபம் ஈட்டின.

நிப்டியில் பவர்கிரிட், ஓஎன்ஜிசி, ஐசிஐசிஐ வங்கி, பார்தி ஏர்டெல், டாக்டர் ரெட்டீஸ் ஆகிய பங்குகள் லாபமடைந்தன. கோல் இந்தியா, ஹெச்டிஎப்சி லைப், கிராஸிம் இன்டஸ்ட்ரீஸ், சிப்லா, பஜாஜ்  பின்சர்வ் பங்குகள் விலை குறைந்தன

click me!