நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, எம்எல்சிஆர் ரேட்டை 10 முதல் 15 புள்ளிகள் வரை உயர்த்தியுள்ளது. இந்த உயர்வு இன்று முதல் அமலுக்குவந்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, எம்எல்சிஆர் ரேட்டை 10 முதல் 15 புள்ளிகள் வரை உயர்த்தியுள்ளது. இந்த உயர்வு இன்று முதல் அமலுக்குவந்துள்ளது.
எம்எல்சிஆர்-இணைத்து கடன் வாங்கியோருக்கு மாத தவணை கடுமையாக அதிகரிக்கும், அதிகமான தொகை செலுத்த வேண்டியதிருக்கும்
குழந்தைகள் தினம்: உங்கள் குழந்தையின் சிறந்த நிதி எதிர்காலத்துக்கான 3 முதலீட்டுத் திட்டங்கள்
ஒரு மாதம் மற்றும் 3 மாதத்துக்கான எம்எல்சிஆர் 7.60 சதவீதத்திலிருந்து 7.75 சதவீதமாக அதிகரித்துள்ளது. 6 மாதங்கள் முதல் ஓர் ஆண்டுக்கான எம்எல்சிஆர் 7.90 சதவீதத்திலிருந்து 8.05 சதவீதமாக அதிகரித்துள்ளது.
3 ஆண்டுக்கான எம்எல்சிஆர் 8.15 சதவீதத்திலிருந்து 8.25 சதவீதமாகவும், 3 ஆண்டுகளுக்கு மேல் 8.25 சதவீதத்திலிருந்து 8.35 சதவீதமாகஅதிகரிக்கப்பட்டுள்ளது.
எம்எல்சிஆர் என்றால் என்ன?
வங்கிகள் கொடுக்கும் டெபாசிட்களுக்கான வட்டி விகிதம், வாங்கும் கடனுக்கான வட்டி விகிதம் உள்ளிட்ட அனைத்தையும் சேர்த்து அடிப்படை வட்டி வீதம் நிர்ணயம் செய்யப்படுகிறது.
இந்த முறையில் மாற்றம் செய்யப்பட்டு ஒவ்வொரு கால அளவிலும் எந்தக் தொகையில் வங்கிகளுக்கு பணம் கிடைக்கிறது அதனை அடிப்படையாக வைத்து அடிப்படை வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்ய வங்கிகள் முடிவெடுத்தன.
எல்ஐசி(LIC) காப்பீடு நிறுவனத்தின் 2வது காலாண்டு லாபம் 10 மடங்கு அதிகரிப்பு! என்ன காரணம்?
இதற்கு கடன் விகித இறுதிநிலைச் செலவு(மார்ஜினல் காஸ்ட் ஆப் லெண்டிங் ரேட்) (MLCR) என்று பெயர். முன்பு அடிப்படை வட்டி விகிதத்தில் இருந்து கூடுதலாக கடன்களுக்கான வட்டி நிர்ணயம் செய்யப்படும். இப்போது எம்சிஎல்ஆர். அடிப்படையில் கடன்களுக்கான வட்டி நிர்ணயம் செய்யப்படுகிறது.
எம்எல்சிஆர் வீதத்தில் செய்யப்படும் மாற்றம் நேரடியாக கடனுக்கான வட்டியில் எதிரொலிக்கும். அதாவது வங்கியில் ஒருவர் எம்எல்சிஆர் அடிப்படையில் கடன் வாங்கியிருந்தால் எம்எல்சிஆர் உயர்த்தப்பட்டால், கடனுக்கான இஎம்ஐ உடனடியாக அதிகரிக்கும், குறைக்கப்பட்டால் இஎம்ஐ தொகையும் குறையும்.
2022 ஆம்ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாகக் குறைப்பு: மூடிஸ் நிறுவனம் கணிப்பு
நாட்டில் பணவீக்கம் கடந்த அக்டோபர் மாதத்தில் 6.75 சதவீதமாகக் குறைந்துள்ளது. செப்டம்பர் மாதத்தைவிட குறைவு என்றாலும், ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அளவான 6 சதவீதத்துக்குள் வரவில்லை.
இதனால் வரும் டிசம்பர் மாதம் முதல்வாரத்தில் நடக்கும் நிதிக்கொள்கைக் கூட்டத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட்டை 50 புள்ளிகள் வரை உயர்த்தலாம் எனக் கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு வருவதற்கு முன்பே எஸ்பிஐ வங்கி எம்எல்சிஆர் ரேட்டை உயர்த்தியுள்ளது