தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக உயர்ந்துள்ளது. கடந்த இரு நாட்களில் மட்டும் சவரனுக்கு 384 ரூபாய் அதிகரித்துள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக உயர்ந்துள்ளது. கடந்த இரு நாட்களில் மட்டும் சவரனுக்கு 384 ரூபாய் அதிகரித்துள்ளது.
தங்கம் விலை இன்று கிராமுக்கு 39 ரூபாயும், சவரனுக்கு 312 ரூபாயும் உயர்ந்துள்ளது
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை மாலை நிலவரப்படி, கிராம் ரூ.4,901 ஆகவும், சவரன், ரூ.39,208 ஆகவும் இருந்தது.
தங்கம் விலை தொடர் உயர்வு! சென்னையில் சவரனுக்கு 72 ரூபாய் அதிகரிப்பு: இன்றைய நிலவரம் என்ன?
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செவ்வாய்கிழமை) கிராமுக்கு 39 ரூபாய் உயர்ந்து ரூ.4,940 ஆகவும், சவரனுக்கு 312 ரூபாய் அதிகரித்து, ரூ.39 ஆயிரத்து 520 ஆகவும் ஏற்றம் கண்டுள்ளது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4,940க்கு விற்கப்படுகிறது.
தங்கம் விலை கடந்த வாரத்தில் இருந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு, 143 ரூபாய் அதிகரித்துள்ளது. சவரனுக்கு ரூ.1,144 அதிகரித்தது.
ஊசலாட்டத்தில் தங்கம் விலை! 4 நாட்களில் சவரனுக்கு 1100க்கு மேல் உயர்வு: இன்றைய நிலவரம் என்ன?
இந்நிலையில் இந்த வாரம் தொடங்கி இரு நாட்களில் சவரனுக்கு ரூ.384 உயர்ந்துள்ளது. இதனால் தங்கம் வாங்க நினைப்போருக்கு தினசரி ஷாக் கொடுக்கும் வகையில் விலை உயர்ந்து வருகிறது.
உலகச் சூழல் சாதகமாக இருப்பது, அந்நிய முதலீட்டாளர்கள் முதலீடு அதிகரித்து வருவது, டாலர் மதிப்புக் குறியீடு குறைந்துவருவதால் தங்கத்தின் மீதான முதலீடு தேவை அதிகரித்து வருகிறது இதனால், வரும் வாரங்களில் தங்கள் விலை உயர்வதற்கான வாய்ப்பு உள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
வெள்ளி விலை இன்று அதிகரித்துள்ளது. வெள்ளி கிராம் ரூ.67.70 ஆக இருந்தநிலையில் 80 காசு அதிகரித்து, ரூ.68.50ஆகவும், கிலோவுக்கு ரூ.800 உயர்ந்து, ரூ.68,500 ஆக உயர்ந்துள்ளது