Share Market Today: 2-வது நாளாக பங்குச்சந்தையில் சரிவு: சென்செக்ஸ், நிப்டி வீழ்ச்சி: ஏற்றத்தில் ஆட்டோ பங்கு

By Pothy Raj  |  First Published Nov 15, 2022, 10:46 AM IST

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தையில் தொடர்ந்து 2வது நாளாக இன்றும் சரிவு காணப்படுகிறது. சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தன.


மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தையில் தொடர்ந்து 2வது நாளாக இன்றும் சரிவு காணப்படுகிறது. சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தன.

அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்தபோதிலும் வட்டிவீதம் பெரிதாக உயராது என்ற எண்ணம் முதலீட்டாளர்கள் மத்தியில் இருக்கிறது. இந்தியாவில் அக்டோபர் மாதத்தில் பணவீக்கம்  குறைந்து 6.73 ஆகச் சரிந்துள்ளது. கச்சா எண்ணெய் விலையும் பேரலுக்கு 92 டாலராகக் குறைந்துள்ளது.இவை அனைத்தும் சாதகமானதாக இருந்தபோதிலும் வர்தத்கம் காலையில் இருந்தே சோர்வுடன் தொடங்கியது.

Tap to resize

Latest Videos

 

கரடியின் பிடியில் பங்குச்சந்தை! சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் வீழ்ச்சி! என்ன காரணம்?

முதலீட்டாலர்கள் ஆர்வத்துடன் வர்த்தகத்தில் ஈடுபடாததால், பங்குசந்தையில் பங்குகள் விலை சரிந்தன. மிட் மற்றும் ஸ்மால் கேப் பங்குகளை லாபநோக்கம் கருதி விற்பனை செய்ய முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டியதால், காலையில் வர்த்தகம் தொடங்கியதும் ஏற்றத்தை நோக்கி நகர்ந்த வர்த்தகப்புள்ளிகள் சரியத் தொடங்கியது.

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 129 புள்ளிகள் குறைந்து, 61,495 புள்ளிகளுடன் வர்த்தகத்தை நடத்தி வருகிறது, அதேபோல தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி,36 புள்ளிகள் குறைந்து, 18,292 புள்ளிகளிளுடன் வர்த்தகம் நடந்து வருகிறது.

ஊசலாட்டத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் தடுமாற்றம்:LIC பங்கு 7% ஏற்றம்

மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனப் பங்குகளில், டிசிஎஸ், நெஸ்ட்லேஇந்தியா, ஐடிசி, ஹெச்டிஎப்சி, இந்துஸ்தான்யுனிலீவர் உள்ளிட்ட பங்குகள் விலை சரிந்துள்ளன. மற்ற பங்குகள் விலை ஏற்றத்தில் உள்ளன.

நிப்டியில் ஆட்டோமொபைல் பங்குகள் விலை ஏற்றத்துடன் நகர்கின்றன, மாறாக எப்எம்சிஜி, ரியல்எஸ்டேட் துறை பங்குகள் சரிவில் உள்ளன. 

ஆசியப் பங்குச்சந்தையிலும் இன்று ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டன. சீனாவில் கடைபிடிக்கப்படும் கொரோனா கட்டுப்பாடு காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையும் குறைந்துள்ளன. 
 

click me!