Share Market Today: கரடியின் பிடியில் பங்குச்சந்தை! சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் வீழ்ச்சி! என்ன காரணம்?

By Pothy RajFirst Published Nov 14, 2022, 4:05 PM IST
Highlights

வாரத்தின் முதல்நாளான இன்று மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கி சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தன.

வாரத்தின் முதல்நாளான இன்று மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கி சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தன.

அமெரிக்காவின் அக்டோபர் மாத பணவீக்க புள்ளிவிவரங்கள் இன்று இரவு வெளகியாகின்ன. பணவீக்கம் புள்ளிவிவரங்கள் குறைவாகவே இருக்கும் என்று தகவல்கள் தெரிவித்தாலும் அதிகாரபூர்வமான விவரங்களை அறிய முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

ஊசலாட்டத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் தடுமாற்றம்:LIC பங்கு 7% ஏற்றம்

இதனால், பங்குச்சந்தையில் இன்று காலை முதலே வர்த்தகர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டனர். பங்குகளை வாங்குவதைவிட விற்பதிலேயே ஆர்வம் காட்டினர். 

அதுமட்டுமல்லாமல் இந்தியாவிலும் அக்டோபர் மாத பணவீக்கம் குறைவாக இருக்கும் என்று பல்வேறு கணிப்புகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுஅளவைவிடஅதிகமாகவே இருக்கும் என்பதால், வட்டிவீதம் உயர்த்தப்படுவதில் மாற்றம் இருக்காது.

2022 ஆம்ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாகக் குறைப்பு: மூடிஸ் நிறுவனம் கணிப்பு

இதன் காரணமாக முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டதாலும், பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டாததாலும் வர்த்தகம் சரிவில் முடிந்தது. மும்பைப் பங்குச்சந்தையில் மாலை வர்த்தகம் முடிவில் சென்செக்ஸ் 170 புள்ளிகள் குறைந்து, 61,624 புள்ளிகளில் முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 20.50 புள்ளிகள் குறைந்து, 18,329 புள்ளிகளில் நிறைவடைந்தது.

மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கியப் பங்குகளில் 17 நிறுவனப் பங்குகள் லாபத்தில் முடிந்தன, 13 நிறுவனப் பங்குகள் சரிவில் முடிந்தன. கோடக்வங்கி, டாடா ஸ்டீல், பவர் கிரிட், இன்டஸ்இன்ட்வங்கி, இன்போசிஸ், ஹெச்சிஎல்டெக்,டிசிஎஸ், டெக்மகிந்திரா, என்டிபிசி, ஹெச்டிஎப்சி, ஹெச்டிஎப்சி வங்கி, பஜாஜ்பின்சர்வ் ஆகிய பங்குகள் விலை  உயர்ந்தன.

எல்ஐசி நிறுவனத்தின் 2வது காலாண்டு லாபம் 10 மடங்கு அதிகரித்துள்ளதாக பங்குச்சந்தையில் அந்தநிறுவனம் தெரிவித்திருந்து. இதையடுத்து, எல்ஐசி பங்கு மதிப்பு 9 சதவீதம் இன்று வர்த்தகத்தில் உயர்ந்தது.

பங்குச்சந்தையில் உற்சாகம்! சென்செக்ஸ் 850 புள்ளிகள் உயர்வு, நிப்டி ஏற்றம்: காரணம் என்ன?

நிப்டியில் ரியல்எஸ்டேட், தகவல் தொழில்நுட்பம், உலோகத்துறைப் பங்குகள் ஒருசதவீதம் உயர்ந்தன, எப்எம்சிஜி துறைப் பங்குகள் சரிந்தன. 

click me!