Gold Rate Today: தங்கம் விலை தொடர் உயர்வு! சென்னையில் சவரனுக்கு 72 ரூபாய் அதிகரிப்பு: இன்றைய நிலவரம் என்ன?

By Pothy Raj  |  First Published Nov 14, 2022, 10:20 AM IST

தங்கம் விலை கடந்த வாரத்தில் இருந்து தொடர்ந்து ஏற்றத்தை நோக்கி நகர்ந்து  வருகிறது.வாரத்தின் முதல்நாளான இன்று, சவரனுக்கு 72 ரூபாய் அதிகரித்துள்ளது.


தங்கம் விலை கடந்த வாரத்தில் இருந்து தொடர்ந்து ஏற்றத்தை நோக்கி நகர்ந்து  வருகிறது.வாரத்தின் முதல்நாளான இன்று, சவரனுக்கு 72 ரூபாய் அதிகரித்துள்ளது.

தங்கம் விலை இன்று கிராமுக்கு 9 ரூபாயும், சவரனுக்கு 72 ரூபாயும் வஅதிகரித்துள்ளது
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை மாலை நிலவரப்படி, கிராம் ரூ.4,892 ஆகவும், சவரன், ரூ.39,136 ஆகவும் இருந்தது.

Tap to resize

Latest Videos

ஊசலாட்டத்தில் தங்கம் விலை! 4 நாட்களில் சவரனுக்கு 1100க்கு மேல் உயர்வு: இன்றைய நிலவரம் என்ன?

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(திங்கள்கிழமை) கிராமுக்கு 9 ரூபாய் உயர்ந்து ரூ.4,901 ஆகவும், சவரனுக்கு 72 ரூபாய் அதிகரித்து, ரூ.39 ஆயிரத்து 208 ஆகவும் உயர்ந்துள்ளது
கோவை, திருச்சி, வேலூரில்  தங்கம் கிராம் ரூ.4,901க்கு விற்கப்படுகிறது.

தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. கடந்த 8ம்தேதி கிராம் ரூ.4,758 ஆக இருந்தநிலையில் அடுத்த 6 நாட்களில் ரூ.4,901க்கு உயர்ந்துள்ளது. ஏறக்குறைய கிராமுக்கு, 143 ரூபாய் அதிகரித்துள்ளது. சவரனுக்கு ரூ.1,144 அதிகரித்துள்ளது. 

உச்சம் தொட்ட தங்கம் விலை சவரன் ரூ.39 ஆயிரம்! ரூ.900க்கும் மேல் உயர்வு: இன்றைய நிலவரம் என்ன?

 தங்கம் விலை ஒரே வாரத்தில் சவரனுக்கு ரூ.1144 உயர்ந்தது நடுத்தர குடும்பத்துக்கு மக்களுக்கு பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. நீண்டகாலத்துக்குப்பின் தங்கம் விலையும் சவரன் ரூ.39ஆயிரத்தைக் கடந்து உயர்ந்து வருகிறது.  இனிவரும் நாட்களில் தங்கம் விலை ஏற்றத்துடன் பயணிக்கவே வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. 

உலகச் சூழல் சாதகமாக இருப்பது, அந்நிய முதலீட்டாலர்கள் முதலீடு அதிகரித்து வருவது, டாலர் மதிப்புக் குறியீடு குறைந்துவருவதால் தங்கத்தின் மீதான முதலீடு தேவை அதிகரிக்கும் இதனால், வரும் வாரங்களில் தங்கள் விலை உயர்வதற்கான வாய்ப்பு உள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

தங்கம் விலை தொடர்ந்து அதிகரிப்பு! 2 நாட்களில் சவரனுக்கு ரூ.500 உயர்வு: இன்றைய நிலவரம் என்ன?

வெள்ளி விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராம் ரூ.67.50 ஆக இருந்தநிலையில் 20 காசு அதிகரித்து, ரூ.67.70ஆகவும், கிலோவுக்கு ரூ.200 உயர்ந்து, ரூ.67,700 ஆக உயர்ந்துள்ளது


 

click me!