எல்ஐசி காப்பீடு நிறுவனத்தின் நடப்பு நிதியாண்டு செப்டம்பர் மாதத்துடன் முடிந்த 2வது காலாண்டு நிகர லாபம் 10 மடங்கு அதிகரித்துள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
எல்ஐசி காப்பீடு நிறுவனத்தின் நடப்பு நிதியாண்டு செப்டம்பர் மாதத்துடன் முடிந்த 2வது காலாண்டு நிகர லாபம் 10 மடங்கு அதிகரித்துள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
எல்ஐசி நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டின், வரிக்குப்பிந்தைய ஒருங்கிணைந்த நிகர லாபம்(PAT) ரூ.15,952 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.1,434 கோடியாகவே இருந்தது.
பங்குச்சந்தை உயர்வுக்கு 3 காரணங்கள்! 1100 புள்ளிகளில் சென்செக்ஸ்! 52 வார உயர்வில் நிப்டி
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் எல்ஐசி நிகர லாபம், ரூ.683 கோடியாக இருந்தது. ஆனால், 2வது காலாண்டில் நிகர லாபம் 10 மடங்கு உயர்வதற்கு நிறுவனத்தின் கணக்கீடு கொள்கையில் செய்யப்பட்டுள்ள மாற்றம் என்று எல்ஐசி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பங்குச்சந்தையில் எல்ஐசி நிறுவனம் தாக்கல் செய்த அறிக்கையில் “ கணக்கீடு கொள்கையில் செய்த மாற்றம் காரணமாக, செப்டம்பர் 30, 2022 இல் முடிவடைந்த காலாண்டு மற்றும் அரையாண்டுக்கான லாபம் அதிகரித்துள்ளது. இதன்படி பங்குதாரர்களின் நிதி ரூ.14,271 கோடியாக அதிகரித்துள்ளது.
2022 ஆம்ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாகக் குறைப்பு: மூடிஸ் நிறுவனம் கணிப்பு
இதன்படி, ரூ.14,271 கோடியில், நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டில் நிகர வரி ரூ.5,580 கோடி, 2022, ஜூன்30ல் முடிந்தவகையில், ரூ.4,418 கோடி, 2022, மார்ச் 31ல் முடிந்தவகையில் ரூ.4,542 கோடியாகும்.
எல்ஐசி ப்ரிமியம் வருவாயும் 27% அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டின் 2வது காலாண்டில் ப்ரிமியம் தொகை ரூ.1.04 லட்சம் கோடியாக இருந்தநிலையில், நடப்பு காலாண்டின் 2வது காலாண்டில் ரூ.1.32 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
முதல் ஆண்டு பிரிமியம் என்பது நிறுவனத்தின் வளர்ச்சியைக் குறைக்கும் குறியீடாகும், அந்தவைகயில் 11 சதவீதம் அதிகரித்து, ரூ.9,125 கோடியாக அதிகரித்துள்ளது. ப்ரிமியம் புதுப்பித்தல் 2 சதவீதம்உயர்ந்து, ரூ.56,156 கோடியாக அதிகரித்துள்ளது. ஒருமுறை ப்ரிமியம் செலுத்தும் தொகை 62 சதவீதம் உயர்ந்து, ரூ.66,901 கோடியாக உயர்ந்துள்ளது.
ட்விட்டர் நிறுவனம் திவாலாகிவிடும்! ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த எலான் மஸ்க்
எல்ஐசி நிறுவனத்தின் செயல்படா சொத்துக்கள் செப்டம்பர் மாத இறுதியில் ரூ.26,111 கோடியாக குறைந்துள்ளது, இது கடந்த ஜூன் காலாண்டில் ரூ.26,619 கோடியாக இருநத்து. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.28,929 கோடியாக இருந்தது.
எல்ஐசி நிறுவனத்தின் பங்கு மதிப்பு நேற்றைய வர்த்தகத்தில் 1.17% அதிகரித்து, ரூ.628ஆக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.