வர்த்தகத்தின் வாரக் கடைசி நாளான இன்று மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை எட்டி வர்த்தகத்தை முடித்தன. நிப்டி கடந்த 52 வாரங்களில் இல்லாத உயர்வுடன் வர்த்தகத்தை முடித்தது.
வர்த்தகத்தின் வாரக் கடைசி நாளான இன்று மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை எட்டி வர்த்தகத்தை முடித்தன. நிப்டி கடந்த 52 வாரங்களில் இல்லாத உயர்வுடன் வர்த்தகத்தை முடித்தது.
கடந்த இரு நாட்களாக சரிவில் முடிந்த இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் முடிந்து, முதலீட்டாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தின. நிப்டியில் அனைத்து துறைகளும் லாபத்தில் முடிந்தன. சர்வதேச காரணிகள் சாதகமாக அமைந்ததும், உள்நாட்டு காரணிகளும்தான் இந்த உயர்வுக்கு காரணமாகும்.
பொங்கி எழுந்த இந்திய பங்குச் சந்தை; சென்செக்ஸ் 1000 புள்ளிகள் உயர்வு; காரணம் என்ன?
பங்குச்சந்தை உயர்வுக்கு 3 காரணங்கள்
அமெரிக்க பணவீக்க அறிக்கை!
அமெரிக்காவின் அக்டோபர் மாத பணவீக்க அறிக்கை நேற்று வெளியானது. இது எதிர்பார்த்த அளவைவிட 0.4 சதவீதம் குறைந்திருந்து. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தைவிட குறைந்தது. கடந்த ஜனவரி மாதத்திலிருந்து அதிகரித்தபணவீக்கத்திலேயே மிகக்குறைவாகும். இதனால் அமெரிக்காவின் பணவீக்கம் குறைந்துவருவதாலும், அடுத்துவரும் நிதிக்கொள்கையில் வட்டிவீதம் உயர்த்துவதும் குறையும் என்று முதலீட்டாளர்கள் நம்பிக்கை கொண்டனர்.
இதையடுத்து, முதலீட்டாளர்கள் உற்சாகமடைந்து வர்த்தக்தை நடத்தியதால், அமெரிக்கப் பங்குச்சந்தை கடந்த இரண்டரை ஆண்டுகளில் இல்லாத ஏற்றத்தை அடைந்தது. நாஷ்டாக் 7 சதவீத வளர்ச்சி அடைந்தது, டோவ் மற்றும் எஸ்அன்ட்பி 500 புள்ளிகள் அதிகரித்து 5.5 சதவீதம் உயர்ந்தது. அமெரிக்க பங்குச்சந்தை உயர்வு,ஆசியாவில் எதிரொலித்து ஆசிய பங்குச்சந்தைகளும் உயர்ந்தன.
பேஸ்புக் மெட்டாவின் ஆட் குறைப்பு இந்தியாவிலும் பாதிப்பு ! உண்மை விவரங்கள் என்ன?
அந்நிய முதலீடு வரவு
அமெரிக்காவில் வட்டிவீதம் அதிகரித்ததால், இந்தியாவிலிருந்து முதலீட்டை திரும்பப் பெற்ற முதலீட்டாளர்கள் மீண்டும் முதலீடு செய்யத் தொடங்கினர். இதனால், அந்நிய முதலீடு கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளது.
அக்டோரில் அந்நிய முதலீட்டாளர்கள் ரூ.8,430 கோடிக்கு பங்குகளை வாங்கினர், செப்டம்பரில் ரூ.13,405 கோடிக்கு பங்குகளை விற்றனர். இந்த மாதத்தில் முதல் 10 நாட்களில் அந்நிய முதலீட்டாளர்கள் ரூ.8,531 கோடியை சந்தையில் முதலீடு செய்துள்ளனர். அந்நிய முதலீடு வரவு உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது.
ரூபாய் மதிப்பு உயர்வு
இந்தியாவின் ரூபாய் மதிப்பு கடந்த சில மாதங்களாக டாலருக்கு எதிராக கடுமையாக அடிவாங்கி சரிந்தது. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத சரிவையும் ரூபாய் மதிப்பு எதிர்கொண்டது. ஆனால், டாலர் குறியீடு நேற்று இரவு 108ஆகக் சரிந்தவுடன் ரூபாய் மதிப்பு உயரத் தொடங்கியது. டாலருக்கு எதிராக கடந்த 7 வாரங்களில் இல்லாத வகையில் ரூ.80.71 ஆக ரூபாய் மதிப்பு உயர்ந்தது.
பங்குச்சந்தையில் உற்சாகம்! சென்செக்ஸ் 850 புள்ளிகள் உயர்வு, நிப்டி ஏற்றம்: காரணம் என்ன?
இந்த 3 காரணிகளும்தான் பங்குச்சந்தை உயர்வுக்கு முக்கியமாக இருந்தன.
மும்பை பங்குசந்தையில் காலை வர்த்தகம் தொடங்கும் முன்பே ஏற்றத்தில் வர்த்தகம் இருந்தது. வர்த்தகம் தொடங்கியதும், சென்செக்ஸ் புள்ளிகள் உயரத்தொடங்கின. இந்த ஏற்றம், மாலை வரை தொடர்ந்தது. முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்குகளை வாங்கி, கைமாற்றியதால், வர்த்தகம் கடைசி வரை சூடாகவே இருந்தது.
மாலை வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1181 புள்ளிகள் உயர்ந்து, 61,795 புள்ளிகளில் ஏற்றத்துடன் முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 321புள்ளிகள் அதிகரித்து, 18,349 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே நிப்டி புள்ளிகள் கடந்த 52 வாரங்களில் இல்லாத உயர்வைக் கடந்து பின்னர் சரிந்தது.
மும்பைப் பங்குச்சந்தையில் உள்ள முக்கிய 30 பங்குகளில் 7 பங்குகளின் மதிப்பு குறைந்தன. மற்ற 23 நிறுவனங்களின் பங்குகளும் லாபத்தில முடிந்தன. குறிப்பாக, என்டிபிசி, ஹெச்யுஎல், ஐசிஐசிஐ, டாக்டர் ரெட்டீஸ், கோடக் வங்கி உள்ளிட்ட நிறுவனப் பங்குகள்சரிவில் முடிந்தன.
2022 ஆம்ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாகக் குறைப்பு: மூடிஸ் நிறுவனம் கணிப்பு
நிப்டியில் ஹெச்டிஎப்சி, ஹெச்டிஎப்சி வங்கி, இன்போசிஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டெக் மகிந்திரா பங்குகள் லாபத்தில் முடிந்தன. எய்சர் மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோகார்ப்ரேஷன், பிரிட்டனானியா இன்டஸ்ட்ரீஸ், எஸ்பிஐ, மகிந்திராஅன்ட் மகிந்திரா ஆகிய பங்குகள் மதிப்பு சரிந்தன. உலோகம் மற்றும் ஐடி பங்குகள் மதிப்பு 2 முதல் 3 சதவீதம் வரை உயர்ந்தது. ஆட்டோமொபைல், எப்எம்சிஜி, பொதுத்துறை வங்கிப் பங்குகள் ஆர்வத்துடன் கைமாறின.