Childrens Day 2022:குழந்தைகள் தினம்: உங்கள் குழந்தையின் சிறந்த நிதி எதிர்காலத்துக்கான 3 முதலீட்டுத் திட்டங்கள்

By Pothy Raj  |  First Published Nov 14, 2022, 5:04 PM IST

பணவீக்கம் அதிகரித்து வருவது, உறுதியற்ற சூழல் ஆகியவை காரணமாக நம் குழந்தையின் சிறந்த எதிர்காலத்துக்கான சேமிப்புகளை அதிகப்படுத்தவேண்டியது அவசியமாகிறது. 


பணவீக்கம் அதிகரித்து வருவது, உறுதியற்ற சூழல் ஆகியவை காரணமாக நம் குழந்தையின் சிறந்த எதிர்காலத்துக்கான சேமிப்புகளை அதிகப்படுத்தவேண்டியது அவசியமாகிறது. 

கல்வி, வாழ்வாதாரச் செலவு, திருமணம் ஆகியவற்றுக்காக இப்போது இருந்தே சரியான திட்டமிடலுடன் சேமித்தால்தான் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக அமையும். 

Tap to resize

Latest Videos

குழந்தைகளின் சிறந்த எதிர்காலத்துக்கும், நிதிச்சிக்கல் ஏதும் ஏற்படாதவகையில் முதலீடு செய்யவும் 3 அருமையான திட்டங்கள் உள்ளன. 

ஐரோப்பிய கால்பந்தில் தடம்பதிக்கும் முகேஷ் அம்பானி ! Liverpool அணியை விலைக்கு வாங்க பேச்சு

பாலிசிபஜார்.காம் தளத்தின் முதலீட்டுப் பிரிவு தலைவர் விவேக் ஜெயின் முதலீட்டுத் திட்டங்கள் குறித்து விளக்கினார். அவர் கூறியதாவது:

குழந்தைகளுக்கான கல்விச்செலவு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது, தற்போது 11 முதல் 12 சதவீதம் கல்விச் செலவு அதிகரித்துள்ளது. சிறந்த கல்லூரியில் எம்பிஏ படிக்க வேண்டுமென்றால், ரூ.30 லட்சம் வரை செலவாகும். ஆதலால் குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவும், கல்விக்காகவும் சேமிப்பதோடு மட்டுமல்லாமல், நல்ல  பலன்தரக்கூடிய முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வதும் அவசியம். 

எல்ஐசி(LIC) காப்பீடு நிறுவனத்தின் 2வது காலாண்டு லாபம் 10 மடங்கு அதிகரிப்பு! என்ன காரணம்?

முதலீடு செய்யும் முன் குழந்தைகளின் கல்விச் செலவுக்கான தொகை, திருமணம் ஆகியவை குறித்த தெளிவான திட்டமிடல் வேண்டும்.  பணவீக்கம், எதிர்காலச் செலவு அடிப்படையில் திட்டமிடல் வேண்டும். அந்த வகையில் நல்ல  பலன் தரக்கூடிய 3 திட்டங்கள் உள்ளன.

யுனிட் லிங்டு இன்சூரன்ஸ் திட்டம்(யுலிப்ஸ்)

யுலிப்ஸ் திட்டங்கள் குழந்தைகளின் சிறந்த எதிர்காலத்துக்கு நல்ல முதலீட்டுத் திட்டங்களாகும். இதில் முதலீடு மட்டுமல்லாமல் காப்பீடும் சேர்ந்திருக்கும். சரியான வயதில் சரியான தொகை உங்கள் குழந்தைகளுக்கு கிடைக்கும். யுலிப்ஸ் திட்டத்தில் சராசரி வீதம் என்பது 12 முதல் 15%.  சந்தையின் நிலவரத்தைப் பொறுத்து இதன் அளவுகள் மாறுபடலாம். 

இந்த திட்டத்தில் சிறந்த வசதி என்னவென்றால், ப்ரீமியம் தள்ளுபடி இருக்கிறது. பெற்றோர் திடீரென இறந்துவிட்டாலும், காப்பீடுதாரர் தொடர்ந்து ப்ரமீயம் செலுத்தலாம். 

2022 ஆம்ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாகக் குறைப்பு: மூடிஸ் நிறுவனம் கணிப்பு

உத்தரவாத பலன் திட்டங்கள்: 

உத்தரவாத  பலன் திட்டங்கள் என்பது, முதலீட்டோடு சேர்த்து சேமிப்புத் திட்டங்களாகும். குறிப்பிட்ட காலத்துக்குப்பின் உறுதியான தொகை கிடைக்கும். சந்தையில் என்னமாதிரியான ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும், உறுதியான தொகை குழந்தையின் எதிர்காலத்துக்காக பெற முடியும். குழந்தைகளின் எதிர்காலத்தில் ரிஸ்க்எடுக்க விரும்பாத பெற்றோர் இதுபோன்ற முதலீடுகளில் கவனம் செலுத்தலாம். வைப்புத் தொகை,என்எஸ்சி, பிபிஎப் போன்ற பாரம்பரிய திட்டங்களுக்கு மாற்றாக, இந்தத் திட்டங்கள் பலன் அளிக்கும், இதற்கு வட்டிவீதமும் 7 முதல் 7.5 சதவீதம் கிடைக்கும். 

வங்கியும் உங்கள் பணத்தை வைப்புத் தொகையாக 10 ஆண்டுகள் வரை வைக்க முடியும். 45 ஆண்டுகள்வரை பணத்தை லாக்கிங் செய்யலாம். வைப்புத் தொகையில் முதலீடு செய்தால், அதில் முதலீட்டு ரிஸ்க் இருக்கிறது.வட்டி என்பது நெகிழ்வுக்கு உட்பட்டது.வைப்புத் தொகைக்கு கிடைக்கும் வட்டிக்கு வரி இருக்கிறது, ஆனால் உறுதியளிப்பு திட்டத்தில் கிடைக்கும்வட்டிக்கு வரி இல்லை. இதன் மூலம் அதிகமான பலன் தொகை, வட்டியின்றி கிடைக்கும். இதில் காப்பீடுத் திட்டங்களும் உள்ளன. பாலிசிதாரர் திடீரென உயிரிழந்தால், வாரிசுதார்ரகளுக்கு பலன் கிடைக்கும். 

குழந்தைகளுக்கான முதலீட்டு உறுதியளிப்பு தீர்வு

யுனிட் லிங்க்டு மற்று உறுதியளிப்புத் திட்டத்தின் கலவையாக இந்ததிட்டம் இருக்கிறது. இந்தத் திட்டத்தில் 50முதல் 60% தொகை உறுதியான பலன் அளிப்புத் திட்டத்துக்கும், மற்றவை யுலிப் திட்டத்திலும் இருக்கும். உறுதியளிப்புத் திட்டத்தில் கிடைக்கும் தொகை 100 சதவீதம் வந்துவிடும். 
ஆனால் யுலிப் திட்டத்தில் செய்யும் முதலீடு என்பது சந்தையின் ஏற்ற தாழ்வுகளுக்கு உட்பட்டு பலன்கள் குறைவாகவோ அல்லது எதிர்பார்ப்புக்கு அதிகமகவோ கிடைக்கும். 
 

click me!