Share Market Today: பங்குச்சந்தையில் நிலையற்றபோக்கு! கடைசி நேரத்தில் உயர்வில் முடிந்த சென்செக்ஸ், நிப்டி

By Pothy RajFirst Published Nov 16, 2022, 4:08 PM IST
Highlights

மும்பை, தேசியப் பங்குச் சந்தைகள் காலையில் சரிவுடன் வர்த்தகத்தைத் தொடங்கி, மாலையில் கடைசி நேரத்தில் உயர்வுடன் வர்த்தகத்தை முடித்தன.

மும்பை, தேசியப் பங்குச் சந்தைகள் காலையில் சரிவுடன் வர்த்தகத்தைத் தொடங்கி, மாலையில் கடைசி நேரத்தில் உயர்வுடன் வர்த்தகத்தை முடித்தன

ரஷ்யாவிலிருந்து இரு ஏவுகணைகள், போலந்து நாட்டின் எல்லையில் விழுந்து இருவர் உயிரிழந்துள்ளனர். நேட்டா நாடுகளில் உறுப்பினராக இருக்கும் போலந்து மீது ரஷ்யாவின் திடீர் ஏவுகணை பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

பங்குச்சந்தையில் சுணக்கம்! சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் வீழ்ச்சி: வாகனப் பங்கு ஏற்றம்

 உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் மீண்டும் சூடுபிடிக்குமா என்ற அச்சம் முதலீ்ட்டாளர்கள் மத்தியில் எழுந்தது. அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அவசர ஆலோசனையும் நடத்தினார். மேலும்,  ஆசியப் பங்குச்சந்தைகளும் சர்வதேச சூழலைக் கருத்தில் கொண்டு சரிவில் முடிந்தன. இதன் எதிரொலி இந்தியச் சந்தையிலும் இருந்ததால் காலையில்வர்த்தகம் சுணக்கத்துடன் இருந்தது.

ஆனால், அமெரி்க்க அதிபர் ஜோ பிடன், “போலந்தில் விழுந்த ஏவுகணை ரஷ்யா ராணுவத்தினுடையது அல்ல” எனத் தெரிவித்தபின் சர்வதேச பற்றம் தணிந்தது. இதையடுத்து, வர்த்தகம் மீண்டும் சூடிபிடித்து உயரத் தொடங்கியது.

ஒருகட்டத்தில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 62 ஆயிரம் புள்ளிகளைக் கடந்தது, தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 18,400 புள்ளிகளைக் கடந்து வர்தத்கம் நடந்தது. ஆனால் உச்சக் கட்டஉயர்வை இரு சந்தைகளும் தக்கவைக்க முடியவில்லை.

ஊசலாட்டத்தில் பங்குச்சந்தை: நிப்டி,சென்செக்ஸ் ஏற்றம்! ஆட்டோ, எரிவாயு,வங்கி பங்கு லாபம்

இதையடுத்து, மாலை வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 107 புள்ளிகள் உயர்ந்து, 61,980 புள்ளிகளில் முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி, 6 புள்ளிகள் அதிகரித்து, 18,409 புள்ளிகளில் முடிந்தது.

மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனப் பங்குகளில் 14 பங்குகள் விலை உயர்ந்தன. மற்ற நிறுவனப் பங்குகள் விலை சரிந்தன. நெஸ்ட்லே இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, கோடக்மகிந்திரா வங்கி, பார்தி ஏர்டெல், ஹெச்டிஎப்சி, சன்பார்மா, பவர்கிரிட், விப்ரோ உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தன. 
நிப்டியில் மின்சக்தி, ரியல்எஸ்டேட், உலோகத்துறை பங்குகள் சரிந்தன. 

click me!