share market today:பாதாளத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1200புள்ளிகள் வீழ்ச்சி: ஐடி பங்குகள் அடி: காரணம் என்ன?

Published : Aug 29, 2022, 09:48 AM IST
share market today:பாதாளத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1200புள்ளிகள் வீழ்ச்சி: ஐடி பங்குகள் அடி: காரணம் என்ன?

சுருக்கம்

மும்பை பங்குச்சந்தையும், தேசியப் பங்குச்சந்தையும் வாரத்தின் முதல்நாளில் பெரும் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. 

மும்பை பங்குச்சந்தையும், தேசியப் பங்குச்சந்தையும் வாரத்தின் முதல்நாளில் பெரும் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. 

வாரத்தின் முதல்நாளான இன்று மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடங்குவதற்கு முன்பு இருந்தே சரிவுடன் காணப்பட்டு 1400 புள்ளிகள் வீழ்ச்சியில் இருந்தது. வர்த்தகம் தொடங்கியதும், மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1300 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தது. 

செப்டம்பரில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை? தெரிந்து திட்டமிடுங்கள்

தேசியப் பங்குசந்தையிலும் நிப்டி 250 புள்ளிகள் சரிந்து, 17,200 புள்ளிகளுக்கு கீழ் சென்றது. முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று முதலீட்டை எடுக்க நினைத்ததன் விளைவுதான் பங்குச்சந்தையில் பெரிய சரிவு காணப்படுகிறது.

மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1,109 புள்ளிகள் வீழ்ச்சியுடன், 57,724 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. தேசியப்பங்குச்சந்தையில் நிப்டி 295 புள்ளிகள் சரிவுடன்17,263 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது.

30 முக்கிய பங்குகளைக் கொண்ட மும்பைப் பங்குச்சந்தையில் இந்துஸ்தான் யூனிலீவர் பங்குகளைத் தவிர அனைத்து நிறுவனப் பங்குகளும் சரிவில் உள்ளன. தகவல் தொழில்நுட்பம், பொதுத்துறை வங்கிப் பங்குகள் பெருத்த அடிவாங்கின. இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ், டெக்மகிந்திரா,ஹெச்சிஎல் டெக் ஆகிய நிறுவனப் பங்குகள் பெரும் சரிவில் உள்ளன.

கடன் வாங்குறது காஸ்ட்லி! EMI உயரும்! LIC ஹவுசிங் பைனான்ஸ் வட்டியை உயர்த்தியது

சரிவுக்கு காரணம் என்ன
அமெரிக்க பெடரல் வங்கியின் தலைவர் பாவெல் கடந்த வாரம் பேசுகையில் “ அமெரிக்காவில் அதிகரித்துவரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த கடினமான நிதிக்கொள்கை பின்பற்றப்படும். வட்டிவீதம் கடுமையாக உயர்த்தப்படும்” என எச்சரித்திருந்தார். 

அதானி கெத்து! சொத்து மதிப்பு ஓர் ஆண்டில் எவ்வளவு அதிகரிப்பு? அம்பானி, டாடா குழுமம் பின்னடைவு

இதையடுத்து, சர்வதேச சந்தையில் டாலரின் மதிப்பு வலுவடைந்தது. ஆசியப் பங்குச்சந்தையிலும் டாலரின் மதிப்பு வலுவடைந்ததால் ஆசியச் சந்தையும் ஆட்டம் கண்டது. டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பும் எப்போதும் இல்லாத வகையில் 80 ரூபாக்கும் மேல்சென்று வீழ்ச்சி அடைந்தது. கடந்தவார கடைசி வர்த்தக தினத்தில் ரூபாய் மதிப்பு ரூ.79.86 காசுகளாக இருந்த நிலையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் ரூ.80.10 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.
 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

அரசு ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு.. 1 கோடி குடும்பங்கள் நிம்மதி.!
அனில் அம்பானிக்கு அதிர்ச்சி.! அமலாக்கத்துறை எடுத்த அஸ்திரம்.. இடியாப்ப சிக்கலில் ரிலையன்ஸ் பவர்