gold rate today: சரசரவென சரியும் தங்கம் விலை! கணிக்க முடியாததால் நகைப்பிரியர்கள் தவிப்பு: இன்றைய நிலவரம் என்ன?

By Pothy RajFirst Published Aug 27, 2022, 10:13 AM IST
Highlights

தங்கம் விலை தினசரி ஊக்க முடியாத வகையில் பெரிய மாற்றத்துடன் நகர்ந்து வருகிறது. இந்த வாரத்தில் சில நாட்கள் விலை உயர்ந்த நிலையில் தொடர்ந்து 2-வது நாளாக விலை குறைந்துள்ளது.

தங்கம் விலை தினசரி ஊக்க முடியாத வகையில் பெரிய மாற்றத்துடன் நகர்ந்து வருகிறது. இந்த வாரத்தில் சில நாட்கள் விலை உயர்ந்த நிலையில் தொடர்ந்து 2-வது நாளாக விலை குறைந்துள்ளது.

தங்கம் விலை இன்று கிராம் ஒன்றுக்கு 15 ரூபாயும், சவரனுக்கு 120 ரூபாயும் விலை குறைந்துள்ளது. 
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,820க்கும், சவரன் ரூ.38,560க்கும் விற்கப்பட்டது.

கோதுமை மாவு ஏற்றுமதிக்கு மத்திய அரசு திடீர் கட்டுப்பாடு

தங்கம் விலை சனிக்கிழமை(இன்று) காலை மீண்டும் குறைந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 15 ரூபாய் சரிந்து, ரூ.4,805 ஆகவும், சவரனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.38,440ஆகவும் விற்கப்படுகிறது. 

கோவை, திருச்சி, வேலூரில்  தங்கம் கிராம் ரூ.4805ஆக விற்கப்படுகிறது. 

கடந்த வாரம் முழுவதும் தங்கம் விலை குறைந்திருந்தது. ஆனால், இந்த வாரத் தொடக்கத்திலிருந்து தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடனே இருந்து வருகிறது. இந்த வாரத் தொடக்கத்தில் தங்கம் கிராம் ரூ.4815 என்ற நிலையில் இருந்தது, ஆனால் வாரத்தின் கடைசி நாளான இன்று ரூ.4,805 என்ற அளவில் இருக்கிறது.

‘ஹாஸ்டைல் டேக்ஓவர்’ என்றால் என்ன? இப்படித்தான் என்டிடிவியை கபளீகரம் செய்ததா அதானி குழுமம்

இந்த இரு விலைக்கும் இடையிலான வேறுபாடு வெறும் 10 ரூபாய் என்றபோதிலும், இடைப்பட்ட 4 நாட்களில் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.35 வரை அதாவது ரூ.4,850 வரை உயர்ந்து, பின்னர் குறைந்தபட்சமாக ரூ.4,800வரை சரிந்தது.

அதேபோன்று, சவரனும், வாரத்தொடக்கத்தில் ரூ.38,520 என்ற விலையில் இருந்தது. இடைப்பட்ட 4 நாட்களில் சவரனுக்கு ரூ.80 குறைந்து, இன்று சவரன் ரூ.38,440 ஆக இருக்கிறது. இடைப்பட்ட நாளில் அதிகபட்சமாக சவரன் ரூ.38,800வரை உயர்ந்தது, குறைந்தபட்சமாக ரூ.38,400 வரை சரிந்தது.

தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருப்பதால் நகைப்பரியர்களும், நடுத்தர மக்களும் நகை வாங்குவதில் சற்று தயக்கத்துடனே அனுகிறார்கள். பெடரல் வங்கி அடுத்துவரும் மாதங்களில் வட்டிவீதத்தை தீவிரமாக உயர்த்தும் என்று அறிவித்துள்ளது. இது செப்டம்பர் மாதத்தில் தெரியவரும். அப்போது தங்கத்தின் விலையில் மாற்றத்தை எதிர்பார்க்கலாம். 

கடன் வாங்குறது காஸ்ட்லி! இஎம்ஐ உயரும்! எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் வட்டியை உயர்த்தியது

வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று 60 பைசா சரிந்து, ரூ.60.70 ஆகவும், கிலோவுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.60,700க்கும் விற்கப்படுகிறது

click me!