
தங்கம் விலை இந்த வாரம் முழுவதும் கடும் ஊசலாட்டத்துடன் இருந்து வருகிறது. தங்கத்தின் விலை நிலையற்று இருப்பதால் நகைப்பரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
தங்கம் விலை இன்று கிராம் ஒன்றுக்கு 10 ரூபாயும், சவரனுக்கு 80 ரூபாயும் விலை குறைந்துள்ளது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,850க்கும், சவரன் ரூ.38,800க்கும் விற்கப்பட்டது.
wheat flour export: கோதுமை மாவு ஏற்றுமதிக்கு மத்திய அரசு திடீர் கட்டுப்பாடு
தங்கம் விலை வெள்ளிக்கிழமை(இன்று) காலை திடீரெனக் குறைந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் குறைந்து, ரூ.4,840 ஆகவும், சவரனுக்கு ரூ.80 சரிந்து, ரூ.38,720ஆகவும் விற்கப்படுகிறது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4840ஆக விற்கப்படுகிறது.
‘ஹாஸ்டைல் டேக்ஓவர்’ என்றால் என்ன? இப்படித்தான் என்டிடிவியை கபளீகரம் செய்ததா அதானி குழுமம்
இந்த வாரத் தொடக்கத்திலிருந்து தங்கத்தின் விலை நிலையற்று இருந்து வருகிறது. தங்கம் விலையில் கடும் ஊசலாட்டம் நிலவி, கடும் ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. இரு நாட்கள் விலை குறைந்தநிலையில் திடீரென சவரனுக்கு 40க்கு மேல் அதிகரித்தது.
பின்னர் தங்கம் விலை குறைந்தது. பின்னர் மீண்டும் அதிகரித்து, இன்று குறைந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் தங்கம் வாங்குவதில் சற்று குழப்பத்துடனே அணுகுகிறார்கள்.
அமெரி்க்க பெடரல் வங்கியின் கூட்டம் இன்றும், நாளையும் நடக்கிறது. இந்த கூட்டத்தில் வட்டிவீதம் உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
என்டிடிவி ஒப்புதல் இல்லாமல் 29% பங்குகளை வாங்கிய அதானி குழுமம் : விவரம் என்ன?
வெள்ளி விலையும் இன்று சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று 20 பைசா குறைந்து, ரூ.61.30 ஆகவும், கிலோவுக்கு ரூ.200 குறைந்து ரூ.61,300க்கும் விற்கப்படுகிறது
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.