செப்டம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்ற பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்கள் மாநிலத்துக்கு மாநிலம் கொண்டாடப்படும் பண்டிகைகளைப் பொறுத்து மாறுபடும்
செப்டம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்ற பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
இந்த விடுமுறை நாட்கள் மாநிலத்துக்கு மாநிலம் கொண்டாடப்படும் பண்டிகைகளைப் பொறுத்து மாறுபடும்
wheat flour export: கோதுமை மாவு ஏற்றுமதிக்கு மத்திய அரசு திடீர் கட்டுப்பாடு
அந்த வகையில் செப்டம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு 8 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதில் 2வது மற்றும் 4வது வாரத்தில் வரும் சனி,ஞாயிற்றுக்கிழமைகள் கணக்கில் எடுக்கப்படாது. இந்த நாட்களையும் சேர்த்தால் செப்டம்பரில் வங்கிகளுக்கு மொத்தம் 14 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும்.
ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின்படி, செப்டம்பர் மாதத்தில் வரும் 8 விடுமுறை நாட்களும் பிராந்திய விடுமுறை நாட்களாகும். இது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும், சில நாட்கள் பொதுவானதாக அமையும். இந்த விடுமுறை நாட்களில் வங்கிகள் செயல்படாவிட்டாலும், ஆன்-லைன் வங்கிச் சேவை வழக்கும் போல் இருக்கும்.
‘ஹாஸ்டைல் டேக்ஓவர்’ என்றால் என்ன? இப்படித்தான் என்டிடிவியை கபளீகரம் செய்ததா அதானி குழுமம்
செப்டம்பர் மாத விடுமுறை நாட்கள்
செப்டம்பர் 1: விநாயகர் சதுர்த்தி
செப்டம்பர் 6: கர்ம பூஜை(ராஞ்சி)
செப்டம்பர் 7: முதல் ஓணம்(கேரளா)
செப்டம்பர் 8: திருவோணம்(கேரளா)
செப்டம்பர் 9: இந்திரஜத்ரா(காங்டாக்)
செப்டம்பர் 10:ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி(கேரளா,கொச்சி, திருவனந்தபுரம்)
செப்டம்பர் 21: ஸ்ரீ நாராயண குரு சமாதிநாள்(கேரளா, கொச்சி, திருவனந்தபுரம்)
செப்டம்பர் 26: நவராத்திரி ஸ்தபனா, மேரா சாரோன் லெய்னிங்தோ சனாமஹி(ஜெய்பூர்,இம்பால்)
என்டிடிவி ஒப்புதல் இல்லாமல் 29% பங்குகளை வாங்கிய அதானி குழுமம் : விவரம் என்ன?
வார விடுமுறை நாட்கள்
செப்டம்பர் 4 – முதல் ஞாயிறு
செப்டம்பர் 10- 2-வது சனிக்கிழமை
செப்டம்பர் 11- 2-வது ஞாயிற்றுக்கிழமை
செப்டம்பர் 18- 3-வது ஞாயிற்றுக்கிழமை
செப்டம்பர் 24- 4-வது சனிக்கிழமை
செப்டம்பர் 25- 4-வது ஞாயிற்றுக்கிழமை