windfall tax:பெட்ரோல், டீசல் ஏற்றுமதி வரி குறைப்பு: கையைச் சுட்டுக்கொண்ட மத்திய அரசு: அம்பானிக்கு நிம்மதி

By Pothy RajFirst Published Jul 20, 2022, 11:14 AM IST
Highlights

இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோல், டீசலுக்கு ஏற்றுமதி வரி விதி்த்த நிலையில் 3 வாரங்களில் அந்த வரியை குறைத்து மத்திய அரசு திடீரென அறிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோல், டீசலுக்கு ஏற்றுமதி வரி விதி்த்த நிலையில் 3 வாரங்களில் அந்த வரியை குறைத்து மத்திய அரசு திடீரென அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு ரிலையன்ஸ், வேதாந்தா, ஷெல் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்கு பெரும் நிம்மதியளிக்கும்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ரஷ்யா மீது தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ரஷ்யாவில் உள்ள ரோஸ்நெப்ட் நிறுவனத்தின் நயாரா எனர்ஜி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீ்ஸ் நிறுவனங்கள் இந்தியாவிலிருந்து பெட்ரோல், டீசல் உற்பத்தி செய்து ஐரோப்பிய நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் அனுப்பி வந்தன. 

சிவசேனா கதை முடிகிறதா? 12 எம்.பி.க்கள் ஷிண்டே பக்கம்: புதிய அவைத் தலைவர் தேர்வு

பெட்ரோல், டீசலை ஏற்றுமதி செய்து நல்ல லாபம் ஈட்டன. இதற்கு செக் வைக்கும் வகையிலும், உள்நாட்டில் விலையைக் குறைக்கும் வகையிலும் மத்திய அரசு கடந்த 1ம் தேதி ஏற்றுமதி வரி விதித்தது.
பெட்ரோல், விமான எரிபொருள் ஏற்றுமதிக்கு லிட்டருக்கு ரூ.6, டீசல் ஏற்றுமதிக்கு லிட்டருக்கு ரூ.13 வரியாக விதிக்கப்பட்டது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் டன்னுக்கு ரூ.23,250 வரியாகவும் செலுத்த வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் விண்ட்பால் டேக்ஸ் எனப்படும் கூடுதல் வரிவிதிக்கப்பட்ட 3 வாரங்களில் அந்த வரியைக் குறைப்பதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. 

அரிசி, கோதுமை உள்பட 14 பொருட்களை சில்லறையில் விற்றால் ஜிஎஸ்டி வரி இல்லை: சீதாராமன்

இதன்படி, டீசல் மற்றும் விமானங்களுக்கான எரிபொருள் ஏற்றுமதியில் லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டதாகவும், கேஸோலைன் ஏற்றுமதியில் லிட்டருக்கு ரூ.6 விதிக்கப்பட்ட வரி முற்றிலும் நீக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு டன்னுக்கு ரூ.17ஆயிரமாக குறைத்துவிட்டது.

மத்திய அரசு கடந்த 1ம் தேதி பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டபின், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையும் சரிந்தது. இதனால், இந்தியாவில் சுத்திகரிப்பு ஆலை வைத்துள்ள தனியார் நிறுவனங்களின் வருமானமும், ஏற்றுமதியும் குறைந்தது. இதையடுத்து, கூடுதல்வரியை மத்திய அரசு நீக்கியுள்ளது.

இலங்கை மட்டுமல்ல…. இன்னும் ஒரு டஜன் நாடுகள் பொருளாதாரச் சிக்கல் அபாயத்தில் சிக்கித் தவிப்பு

click me!