
தங்கம் விலை கடந்த வாரத்திலிருந்து கடும் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. ஒரு நாள் விலை உயர்கிறது, மறுநாள் குறைகிறது.ஆபரணத் தங்கம் விலை நேற்று குறைந்தநிலையில் இன்று உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று காலை நிலவரப்படி, தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 9ரூபாயும், சவரணுக்கு 72 ரூபாயும் உயர்ந்துள்ளது.
ரயில்களில் விற்கப்படும் டீ, காபி, உணவுக்கு சர்வீஸ் சார்ஜ் நீக்கம்: ஆனால்?
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை நிலவரப்படி கிராம் ரூ.4,658க்கும், சவரண் ரூ.37,264க்கும் விற்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.9 விலை உயர்ந்து, ரூ4,667 ஆகவும், சவரணுக்கு ரூ.72 அதிகரித்து ரூ.37,336க்கும் விற்கப்படுகிறது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4667ஆக விற்கப்படுகிறது.
தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் இருந்த ஊசலாட்டத்துடனே இருந்து வருகிறது. தங்கம் விலை திங்கள்கிழமை உயர்ந்தநிலையில் நேற்று சரிந்தது, இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.
சர்வதேச சூழலும் அமெரிக்கபெடரல் வங்கியால் பதற்றமாக இருப்பதால், தங்கத்தின் விலையிலும் கடும் ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது. கடந்த 3 வாரத்தில் மட்டும் தங்கம் சவரனுக்கு ரூ.2,500 வரை குறைந்துள்ளது.
கடந்த 11ம் தேதியிலிருந்து இன்று வரை(20ம்தேதி) தங்கத்தின் விலையில் பெரிதாக மாற்றம் ஏதும் இல்லை. கிராமுக்கு ரூ.50க்குள் தினசரி விலை ஏறி, இறங்கி வருகிறதே தவிர, இதைக் கடந்து விலை செல்லவில்லை. கிராமுக்கு 50 ரூபாய்க்குள் விலை அதிகரித்து, குறைந்தவருவதால், நகை வாங்குவோரை பெரிதாக பாதிக்காது.
ரூபாய் மதிப்பு சரிவு பொருளாதாரத்துக்கு நல்லதுதான்: நிர்மலா சீதாராமன்
தங்கத்தின் விலையில் பெரிதாக மாற்றம் இல்லாத இந்நேரத்தில்தான் நடுத்தரக் குடும்பத்தினர், சாமானியர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய ஏற்ற தருணம் என்று சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்
விலை ஊசலாட்டத்துக்கு காரணம் என்ன
சர்வதேச சந்தை முழுவதும் அமெரிக்க பெடரல் வங்கி என்ன செய்யப் போகிறது என்பதை எதிர்பார்த்து காத்திருக்கிறது. அமெரிக்காவின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் பெடரல் வங்கி வரும் 26,27ம் தேதி கூடி ஆலோசிக்கிறது. இந்தக் கூட்டத்தில், வட்டிவீதத்தை 100 புள்ளிகளை பெடரல் வங்கி உயர்த்தினால், ஆசிய, ஐரோப்பிய நாடுகளின் சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இதனால், தங்கத்தின் மீது எந்த முதலீட்டாளரும் துணிந்து முதலீடு செய்யாமல் குறுகிய லாபம் ஈட்டும் நோக்கத்தில்தான் உள்ளனர். இதனால்தான் தங்கத்தின் விலையில் தினசரி கடும் ஏற்றம், இறக்கம் நிலவுகிறது.
அரிசி, கோதுமை உள்பட 14 பொருட்களை சில்லறையில் விற்றால் ஜிஎஸ்டி வரி இல்லை: சீதாராமன்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள ஏற்ற ,இறக்கமும் தங்கம் விலை ஊசலாட்டத்துக்கு காரணமாகும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும்போது, தங்கத்தின் விலை குறையும்.
வெள்ளி விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 30 பைசா அதிகரித்து ரூ.61க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிலோ ரூ.300 அதிகரி்த்து ரூ.61,000க்கு விற்கப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.