GST rate hikes on food: அரிசி, கோதுமை உள்பட 14 பொருட்களை சில்லறையில் விற்றால் ஜிஎஸ்டி வரி இல்லை: சீதாராமன்

By Pothy Raj  |  First Published Jul 19, 2022, 4:31 PM IST

அரிசி, கோதுமை,தயிர், பருப்பு வகைகள் உள்ளிட்ட 14 வகை உணவுப் பொருட்களை சில்லரை விற்றால் அல்லது பேக்கிங் செய்யாமல், லேபிள் இன்றி விற்றாலோ ஜிஎஸ்டி வரிவிதிக்கப்படாது என்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.


அரிசி, கோதுமை,தயிர், பருப்பு வகைகள் உள்ளிட்ட 14 வகை உணவுப் பொருட்களை சில்லரை விற்றால் அல்லது பேக்கிங் செய்யாமல், லேபிள் இன்றி விற்றாலோ ஜிஎஸ்டி வரிவிதிக்கப்படாது என்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

ஆனால் இதற்கு முந்தைய அறிவிப்பின்படிஇந்த 14 வகைப்பொருடகளுக்கும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டிருந்தது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் மத்திய அ ரசு பின்வாங்கியுள்ளது. 

Tap to resize

Latest Videos

சமீபத்தில் நடந்த 47-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அரிசி, தயிர், பனீர், கோதுமை, கோதுமை மாவு, மைதா உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. 

கிரிப்டோகரன்சியை தடை செய்ய ரிசர்வ் வங்கி விரும்புகிறது: நிர்மலா சீதாராமன் அதிர்ச்சித் தகவல்

அதாவது, 25 கிலோவுக்கு அதிகமாக இருந்தால் ஜிஎஸ்டி வரி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. முன்கூட்டியே பேக்கிங் செய்யப்பட்டு, லேபிள் ஒட்டப்பட்டு இருந்து 25 கிலோ அல்லது 25 லிட்டருக்குள் இருந்தால், ஜிஎஸ்டி வரிவிதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரிவிதிக்கப்பட்டது குறித்து காங்கிரஸ் உள்ளி்ட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து பிரச்சினையை எழுப்பினர். இதையடுத்து, பிராண்டட் மற்றும் லேபிள் ஒட்டிய பொருட்களுக்கு மட்டும்தான் ஜிஎஸ்டி வரிவிதிப்புக்குள் வரும், சில்லறையில் விற்பதற்கு வரியில்லை என்று நிர்மலா சீதாரமன் திடீர் விளக்கத்தை அளித்துள்ளார்.

மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் ட்விட்டரில் நீண்ட விளக்கத்தை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

பருப்புவகைகள், அரிசி, கோதுமாவு, மைதா, தயிர் உள்ளிட்ட பொருட்களுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்பு என்பது ஜிஎஸ்டி கவுன்சிலில் அனைத்துஉறுப்பினர்களாலும் ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவு. அந்தக் கூட்டத்தில் பாஜக ஆளாத மாநிலங்களின் பிரதிநிதிகளும் இருந்தனர். 

உலகின் வேகமாக வளரும் பொருளாதாரத்தை பாஜக அழிக்கிறது: ராகுல் காந்தி விளாசல்

பருப்பு வகைகள், தானியங்கள், மாவு வகைகளுக்கு விதிக்கப்பட்ட வரியை மறுஆய்வு செய்யக் கோரி 47-வது ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது. ஏராளமான தவறான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. இதுதான் உண்மை.

உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவது இதுதான் முதல்முறை அல்ல. ஜிஎஸ்டி வரி வருவதற்கு முன்பே பல மாநிலங்களில்  உணவு தானியங்கள் மீது பெரிய அளவிலான வருவாய் வந்தது. பஞ்சாப் மாநிலம் மட்டும் உணவு தானியங்கள் வகையில் கொள்முதல் வரியாக ரூ.2ஆயிரம் கோடியும், உ.பி. ரூ.700 கோடியும் வசூலித்தன.

ஜிஎஸ்டி வரி நடைமுறைக்கு வந்தபின், 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி என்பது, பிராண்டட் பருப்புவகைகள், தானியங்கள், மாவு வகைகளுக்குதான். பின்னர் இதுவும் திருத்தப்பட்டு, இந்த பொருட்கள் அனைத்தும் பதிவுசெய்யப்பட்ட பிராண்ட அடிப்படையில் விற்றால்மட்டும்தான் வரி எனத் திருத்தப்பட்டது.
ஆனால் புகழ்பெற்ற நிறுவனங்கள், பிராண்ட் நிறுவன உரிமையாளர்கள் இதை தவறாகப்பயன்படுத்தினார்கள். ஜிஎஸ்டி வருவாய் படிப்படியாகக் குறைந்தது. 

: ரயில்களில் விற்கப்படும் டீ, காபி, உணவுக்கு சர்வீஸ் சார்ஜ் நீக்கம்: ஆனால்?

சமீபத்தில் நடந்த 47-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பருப்பு,தானியங்கள், மாவு வகைகள் உள்ளிட்ட சில பொருட்களுக்கு மட்டும் வரிவிதிக்க பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், அதுகுறித்த தவறான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. 

ராஜஸ்தான், மேற்கு வங்கம், தமிழகம், பிஹார், உத்தரப்பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, ஹரியானா, குஜராத் மாநிலங்களின் அதிகாரிகள் சேர்ந்து இந்த விஷயத்தை பலமுறை ஆய்வு செய்துதான் பரிந்துரைகள அளித்தார்கள்.

 

https://t.co/EDWfuYnGzC

— Nirmala Sitharaman (@nsitharaman)

உதாரணமாக, பருப்பு, தானியங்களான அரிசி, கோதுமை, கோதுமை மாவு ஆகியவை பிராண்டட் மற்றும் பேக் செய்யப்பட்டிருந்தால் 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. ஆனால், 18ம்தேதி முதல் இந்தப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி முன்கூட்டியே பேக் செய்யப்பட்டு, லேபிள் ஒட்டப்பட்டிருந்தால் மட்டும்தான் வரிவிதிக்கப்படும்.

14 வகையான உணவுப்பொருட்களை சில்லறையில் விற்றாலோ, அல்லது முன்கூட்டியே பேக்கிங்செய்யாமல், லேபிள் இல்லாமல் இருந்தாலோ ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாது. 

பாஜக ஆளாத மாநிலங்களான பஞ்சாப், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தமிழகம், மே.வங்கம்,ஆந்திரா, தெலங்கானா , கேரளா மாநிலங்களும் இந்த முடிவை ஏற்றுக்கொண்டன. ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு கருத்தொற்றுமையின்படிதான்எடுக்கப்படுகிறது.

மே.வங்கம், ராஜஸ்தான், கேரளா, உ.பி.கோவா, பிஹார் மாநிலங்களின் உறுப்பினர்கள் கொண்ட அமைச்சர்கல் குழு சில ஆலோசனைகள் வழங்கியுள்ளதுஅதை கவனத்துடன் பரிசீலிப்போம். 
இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

click me!