rupee vs dollar today: ரூபாய் மதிப்பு சரிவு பொருளாதாரத்துக்கு நல்லதுதான்: நிர்மலா சீதாராமன்

Published : Jul 19, 2022, 11:17 AM ISTUpdated : Jul 19, 2022, 10:10 PM IST
rupee vs dollar today: ரூபாய் மதிப்பு  சரிவு பொருளாதாரத்துக்கு நல்லதுதான்: நிர்மலா சீதாராமன்

சுருக்கம்

கடந்த 2014ம் ஆண்டு, டிசம்பர் 31ம் தேதியிலிருந்து  பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் இதுவரை டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு 25 சதவீதம் சரிந்துள்ளது. ரூபாய் மதிப்பு சரிவு பொருளாதாரத்துக்கு நல்லதுதான் என்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

கடந்த 2014ம் ஆண்டு, டிசம்பர் 31ம் தேதியிலிருந்து  பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் இதுவரை டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு 25 சதவீதம் சரிந்துள்ளது என்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளி்த்தார்.அப்போது அவர் கூறியதாவது: 

ஒரேநாளில் தங்கம் விலை இவ்வளவு குறைவா! காரணம் என்ன? மிஸ் பண்ணாதிங்க! இன்றைய நிலவரம் என்ன?

2014ம்ஆண்டு டிசம்பர் 31ம் தேதி டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு ரூ.63.33 ஆகஇருந்தது. 2022, ஜூலை 11ம் தேதி நிலவரப்படி இந்திய ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராக ரூ.79.41 ஆகச் சரிந்துள்ளது.கடந்த 8 ஆண்டுகளில் ரூபாய் மதிப்பு 25 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது என ரிசர்வ் வங்கி புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. டாலருக்கு எதிராக ரூபாயை மாற்றுவதற்கு ரூ.78.94 என ஜூன் 30ம் தேதி நிலவரப்படி வழங்கப்படுகிறது

பணவீக்கம், சமையல் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

சர்வதேச காரணிகள், உக்ரைன் ரஷ்யா போர், கச்சா எண்ணெய் விலை சர்வேச சந்தையில் திடீரென அதிகரித்தது. சர்வதேச நிதிச்சூழல் போன்றவைதான் இந்திய ரூபாய் மதிப்பு சரிவுக்குக் காரணங்களாகும். பிரி்ட்டனின் பவுண்ட் ஸ்டெர்லிங், ஜப்பானின் யென் ஆகியவற்றின் மதிப்பு இந்த காலக்கட்டத்தில் இந்திய ரூபாயை விட மோசமாகச் சரிந்துள்ளது. 2022ம் ஆண்டில் டாலருக்கு எதிராக  ரூபாய் வலுவடைந்திருக்கிறது. 

ரூபாய் மதிப்புச் சரிவு ஏற்றுமதியில் போட்டியை அதிகப்படுத்தும். பொருளாதாரத்திலும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். 

பங்குச்சந்தையிலிருந்து அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேறவது ரூபாய் மதிப்பு சரிவதற்கு பெரும்பகுதி காரணம். இதுதவிர வளர்ந்த நாடுகள் வட்டிவீதத்தை உயர்த்தும் போது, குறிப்பாக அமெரிக்கா வட்டிவீதத்தை உயர்த்தும்போது, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்பப் பெறுகிறார்கள்.

மாநிலங்களவையில் இசையமைப்பாளர் இளையராஜா எம்.பி. பதவி ஏற்கவில்லை... காரணம் இதுதான்!!

இதனால் டாலர் அதிகமாக வெளியேறும்போது, ரூபாய் மதிப்பு சரிகிறது. 2022-23ம் ஆண்டில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் மட்டும் 1400 கோடி டாலர் முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளனர். 
இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்

இன்று காலை வர்த்தகத்தில்  இந்திய ரூபாய் மதிப்பு 80 ரூபாய்க்கும் கீழே சென்றது. வர்த்தகம் நேற்றைய முடிவில் ரூ.79.98 காசுகலில் நிலை பெற்ற நிலையில் இன்று வீழ்ச்சி அடைந்தது
 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

ஆதார் அட்டைக்கு புதிய பாதுகாப்பு: இனி நகல் தேவையில்லை!
நெட்வொர்க் இல்லையா.? நோ கவலை.. ஆப் இல்லாமல் இப்போ ஈசியா பணம் அனுப்பலாம்