இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத வகையில், வரலாற்றிலேயே முதல்முறைாயக டாலருக்கு எதிராக 80ரூபாய்க்கும் கீழ் சரிந்தது. தொடரந்து 8-வது நாளாக ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருகிறது.
இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத வகையில், வரலாற்றிலேயே முதல்முறைாயக டாலருக்கு எதிராக 80ரூபாய்க்கும் கீழ் சரிந்தது. தொடரந்து 8-வது நாளாக ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருகிறது.
இன்று காலை அந்நியச் செலாவணிச் சந்தையில் வர்த்தகம் தொடங்கியவுடன், டாலருக்கு எதிராக ரூ.79.99 என்று தொடங்கிய நிலைியல் அடுத்த சில நிமிடங்களில் ரூ.80.02 ஆகச் சரிந்தது.
அமெரிக்க பெடரல் வங்கி வட்டி வீதத்தை உயர்த்தப் போகிறது என்ற தகவலும், கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதும்தான் ரூபாய் மதிப்பு சரிவதற்கு முக்கியக் காரணமாகும்.
அரிசி, கோதுமை உள்பட 14 பொருட்களை சில்லறையில் விற்றால் ஜிஎஸ்டி வரி இல்லை: சீதாராமன்
சவுதி அரேபியா கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகப்படுத்த முடியாது எனத் தெரிவித்ததால், நேற்று சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 5 சதவீதம் உயர்ந்தது. வரும் 26 மற்றும் 27ம் தேதி பெடரல் வங்கியின் நிதிக்கொள்கைக் கூட்டம் நடக்க இருக்கிறது. இதில் அமெரிக்காவின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்து பெடரல் வங்கி 100 புள்ளிகள் வரை உயர்த்தும் எனத் தெரிகிறது.
இந்த அச்சத்தால், முதலீட்டாளர்கள் முதலீ்ட்டை திரும்பப் பெறும்போது டாலர் மதிப்பு வலுவடைந்து ரூபாய் மதிப்பு சரிகிறது
ரயில்களில் விற்கப்படும் டீ, காபி, உணவுக்கு சர்வீஸ் சார்ஜ் நீக்கம்: ஆனால்?
அதிகமான வர்த்தகப் பற்றாக்குறை, அந்நிய முதலீடு வெளியேற்றம் அதிகரிப்பு, பேலன்ஸ்ஆப் பேமென்ட்டில் நெருக்கடி ஆகியவற்றை ரூபாய் மதிப்பு சந்தித்து வரும்போது, டாலர் மதிப்பு வலுவடைவதும் மேலும் பலவீனமாக்கும்.
ரூபாய் மதிப்பு சரிவு பொருளாதாரத்துக்கு நல்லதுதான்: நிர்மலா சீதாராமன்
திங்கள்கிழமை வர்த்தகம் முடியும்போது, ரூபாய் மதிப்பு 80 ரூபாய்க்கு வீழ்ச்சி அடையாமல் சற்று உயர்ந்து ரூ.78.98 பைசாவில் முடிந்தது. ஆனால், வர்த்தகத்தின் இடையே 80 ரூபாயை தொட்டுவிட்டு பின்னர் உயர்ந்தது. ஆனால், இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும், ரூ.80க்கும் கீழ் வீழ்ச்சி அடைந்தது.