Swiggy Layoff 380 Employees: 380 ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கியது ஸ்விக்கி: மன்னிப்புக் கோரிய சிஇஓ

By Pothy RajFirst Published Jan 20, 2023, 2:54 PM IST
Highlights

ஆன்-லைனில் ஆர்டர் எடுத்து உணவு டெலிவரி செய்யும்நிறுவனமான ஸ்விக்கி, 380 ஊழியர்களை இன்று வேலையிலிருந்து நீக்கியதாகத் தெரிவித்துள்ளது. 

ஆன்-லைனில் ஆர்டர் எடுத்து உணவு டெலிவரி செய்யும்நிறுவனமான ஸ்விக்கி, 380 ஊழியர்களை இன்று வேலையிலிருந்து நீக்கியதாகத் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக ஊழியர்களுக்கு மின்அஞ்சலும் நிறுவனத்தின் தலைமைநிர்வாக அதிகாரி ஸ்ரீஹர்ஷா மஜேட்டி அனுப்பியுள்ளதாக பிஸ்னஸ் டுடே இதழ் தெரிவித்துள்ளது.

ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கியதற்கு பல்வேறு காரணங்களை ஸ்விக்கி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

பெண் பயணிக்கு அவமதிப்பு: ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி மன்னிப்புக் கோரினார்

அந்த கடிதத்தில் ஸ்விக்கி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீஹர்ஷா மஜேட்டி கூறியுள்ளதாவது:

நம்முடைய குழுவின் கட்டமைப்பை சீரமைக்கும் நோக்கில் ஊழியர்களின் எண்ணிக்கையைக்க குறைக்கும் கடினமான முடிவை நாங்கள் நடைமுறைப்படுத்த இருக்கிறோம். இந்த நடவடிக்கையில் நாங்கள் 380 ஊழியர்களை வேலையிலிருந்து அனுப்புகிறோம்

நிறுவனத்தின் ரொக்கக் கையிருப்பு போதுமானஅளவு இருந்தாலும், கடினமான சூழல் என வரும்போது சமாளிக்க போதுமான தொகை இல்லை. அதை எங்களால் சமாளிக்க முடியாது, நீண்டகாலத்துக்கு நிலைமைமயை சமாளிக்கும் வழிகளைத் தேடவேண்டியுள்ளது.

பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்பட சர்ச்சை என்ன? மத்திய அரசு ஏன் எதிர்க்கிறது?

நிறுவனம் இலக்கு வைத்த அளவைவிட வளர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது. அதிகமான நபர்களை வேலைக்கு அமர்த்தியது என்பது தவறான முடிவு.இதைவிட சிறப்பான ஏதாவது செய்திருக்க வேண்டும். இந்த முடிவை எடுத்தமைக்காக உங்களிடம் நான் மன்னிப்புக் கோருகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ஸ்விக்கி நிறுவனம் 250 ஊழியர்களை வேலையிலிருந்து நீக்க இருப்பதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தகவல் வெளியானது. ஆனால்அந்த எண்ணிக்கையைவிட கூடுதலாக வேலையிலிருந்து ஊழியர்களை நீக்கியுள்ளது ஸ்விக்கி. ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கும் முடிவு இல்லை என ஸ்விக்கி முன்பு தெரிவித்த நிலையில் இப்போது அந்த நிறுவனமும் வேறுவழியின்றி இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

கடந்த நிதியாண்டில் ஸ்விக்கி நிறுவனத்தின் இழப்பு இரு மடங்காகி ரூ.3,629 கோடியாக அதிகரி்த்தது. கடந்த 2021 நிதியாண்டில் இது ரூ.1,617 கோடியாக இருந்தது. ஸ்விக்கியின் செலவு 131 சதவீதம் உயர்ந்து, ரூ.9,574 கோடியாக 2022 நிதியாண்டில் உயர்ந்தது


 

click me!