
தங்கம் விலை கடந்த 3 நாட்களாகக் குறைந்தநிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. நடுத்தரக் குடும்பத்தினருக்கும் மீண்டும் ஷாக் அளிக்கும் வகையில் உள்ளது.
தங்கம் விலை இன்று கிராமுக்கு 35 ரூபாயும், சவரனுக்கு 280 ரூபாயும் விலை அதிகரித்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை நிலவரப்படி, கிராம் ரூ.5,290ஆகவும், சவரன், ரூ.42,320ஆகவும் இருந்தது.
வெள்ளி விலை வீழ்ச்சி!மிரட்டும் தங்கம்!நிலவரம் என்ன ?
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(வெள்ளிக்கிழமை) கிராமுக்கு 35 ரூபாய் சரிந்து ரூ.5,325ஆகவும், சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து ரூ.42 ஆயிரத்து 600 ஆக ஏற்றம் கண்டது
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,325க்கு விற்கப்படுகிறது.
தங்கம் விலை தொடர்ந்து 3நாட்கள் குறைந்து நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. கடந்த 3 நாட்களில் கிராமுக்கு ரூ.27 சரிந்தாலும், இன்று ஒரே நாளில் கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்துள்ளது. அது மட்டுமல்லாமல் இதுவரைஇல்லாத அளவு உச்சமாக சவரன் ரூ.42,600க்கு உயர்ந்துள்ளது.
தங்கம் விலை இறங்குமுகம்! நடுத்தர குடும்பங்களுக்கு நிம்மதி! இன்றைய நிலவரம் என்ன
தங்கம் விலை நாளுக்குநாள் உயர்ந்து வருவது நடுத்தரக் குடும்பத்தினருக்கும், நகைப்பிரியர்களுக்கும் பெரிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
வெள்ளி விலையில் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று ரூ.73.50ஆக இருந்தநிலையில் ஒரு ரூபாய் அதிகரித்து, ரூ.74.50ஆகவும், கிலோவுக்கு ரூ.1,0 00 உயர்ந்து ரூ.74 ஆயிரத்து 500ஆகவும் ஏற்றம் கண்டதுள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.