Share Market LIveToday: தொடர்சரிவில் பங்குச்சந்தை! சென்செக்ஸ், நிப்டி தடுமாற்றம்: HUL பங்கு சரிவு

By Pothy RajFirst Published Jan 20, 2023, 9:40 AM IST
Highlights

தேசிய மற்றும் மும்பைப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 3வது நாளாக இன்றும் சரிவுடன் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளன.

தேசிய மற்றும் மும்பைப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 3வது நாளாக இன்றும் சரிவுடன் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளன. 

சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் தடுமாற்றத்துடன் இருந்து வருவதால், சந்தையில் கடும் ஊசலாட்டம் நிலவுகிறது. 

அமெரிக்கப் பங்குச்சந்தை தொடர்ந்து 2வது நாளாக நேற்றும் சரிவுடன் முடிந்தது. அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை வரலாம் என்ற கருத்தும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பெடரல் ரிசர்வ் வட்டியை உயர்த்தும் என்றகருத்தும் முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் வர்த்தகத்தில் ஈடுபடாததால் சரிவு தொடர்ந்தது. 

ஆனால், ஆசியச் சந்தையில் இன்றுவர்த்தகம் ஏற்றத்துடன் காணப்படுகிறது, ஜப்பானில் பணவீக்கம் புள்ளிவிவரங்கள் வெளியீடு, கச்சா எண்ணெய் விலை ஒரு சதவீதம் உயர்வு, சீனாவில் கச்சா எண்ணெய் தேவை அதிகரிப்பு போன்றவை சாதகமாக உள்ளன.

பங்குச்சந்தை மீண்டும் சரிவு: சென்செக்ஸ், நிப்டி வீழ்ச்சி! காரணம் என்ன?

ஆனாலும் இந்தியச் சந்தையில் காலை வர்த்தகம் சுணக்கமாகவே காணப்பட்டது. காலையில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ், 42 புள்ளிகள் சரிந்து, 60,816 புள்ளிகளி்ல் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 15 புள்ளிகள் சரிந்து 18,092 புள்ளிகளில் வர்த்தகம் நடக்கிறது

மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனங்களில் 17 நிறுவனங்களின் பங்குகள் லாபத்தில் உள்ளன, மீதமுள்ள 13 நிறுவனப் பங்குகள் சரிவில் உள்ளன. பஜாஜ் பைனான்ஸ், மாருதி, மகிந்திரா அன்ட் மகிந்திரா, ரிலையன்ஸ், ஐடிசி, டைட்டன்,சன்பார்மா, ஏசியன்பெயின்ட்ஸ், இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனங்களின் பங்குகள் சரிவில் உள்ளன.

உற்சாகத்தில் பங்குச்சந்தை!சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்வு:Nifty எழுச்சி:HDFC லாபம்

நிப்டியில் எப்எம்சிஜி துறை அதிகபட்சமாக 1.02% சரிந்துள்ளன, மருந்துத்துறை, ஆட்டமொபைல் துறைப் பங்குகளும் சரிவில் உள்ளன. மற்றவகையில் தகவல் தொழில்நுட்பம், ஊடகம், உலோகம், பொதுத்துறை வங்கி, நிதிச்சேவை, வங்கித்துறை பங்குகள் லாபத்தில் உள்ளன.

நிப்டியில் டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ வங்கி, இன்டஸ்இன்ட் வங்கி, பவர்கிரிட், எஸ்பிஐ பங்குகள் லாபத்துடன் நகர்கின்றன. எச்யுஎல், ஏசியன்பெயின்ட்ஸ், சன்பார்மா, பிரிட்டானியா இன்டஸ்ட்ரீஸ், நெஸ்ட்லே பங்குகள் சரிவில் உள்ளன.

இன்று 56 நிறுவனங்கள் 3-வது காலாண்டுமுடிவுகளை வெளியிடுகின்றன. அதில் குறிப்பாக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல், எச்டிஎப்சி இன்சூரன்ஸ், பந்தன் வங்கி, ஆர்பிஎல் வங்கி போன்றவை முக்கியமானதாகும். 

சரிவில் முடிந்த பங்குச்சந்தை: சென்செக்ஸ் வீழ்ச்சி: 18,000 நீடிக்கும் நிப்டி

அது மட்டும்லாமல் கடந்த மே மாதத்துக்குப்பின் அமெரிக்க டாலரின் மதிப்பு சரிந்துள்ளது. இதனால் ஆசியச் சந்தையிலும் டாலர் குறியீடு சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு சாதகமானதாகும். இந்தியப் பங்குச்சந்தையிலும் கடந்த 6 மாதங்களாக பங்குகளை விற்று முதலீட்டை எடுத்த அந்நிய முதலீட்டாளர்கள் தற்போது பங்குகளில் முதலீடு செய்து வருகிறார்கள், நேற்று மட்டும் ரூ.400 கோடிக்கு பங்கு முதலீடு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது

click me!