எல்லோ முத்தூட்டு கோல்டு லோன் உத்சவத்தின் லக்கி டிரா ஆரம்பம் - இது கோல்டு லோன் வாடிக்கையாளர்க்கான லக்கி டிரா

Published : Jan 19, 2023, 03:39 PM IST
எல்லோ முத்தூட்டு கோல்டு லோன் உத்சவத்தின் லக்கி டிரா ஆரம்பம் - இது கோல்டு லோன் வாடிக்கையாளர்க்கான லக்கி டிரா

சுருக்கம்

எல்லோ முத்தூட்டு என பிரபலமாக அறியப்படும், இந்தியாவின் முன்னணி வங்கி சாரா நிதி நிறுவனங்களில் ஒன்றான முத்தூட்டு மினி பைனான்சியர்ஸ், தனது கோல்டு லோன் உத்சவத்தின் ஒரு பகுதியாக லக்கி டிரா கன்டெஸ்ட்டை தொடங்கியுள்ளது. 

எல்லோ முத்தூட்டு என பிரபலமாக அறியப்படும், இந்தியாவின் முன்னணி வங்கி சாரா நிதி நிறுவனங்களில் ஒன்றான முத்தூட்டு மினி பைனான்சியர்ஸ், தனது கோல்டு லோன் உத்சவத்தின் ஒரு பகுதியாக லக்கி டிரா கன்டெஸ்ட்டை இன்று தொடங்கியது. இந்த போட்டியானது, சாமானிய மக்களை சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த போட்டி வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட முயற்சியின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்டுள்ளது. லக்கி டிரா கன்டெஸ்டுக்கு தகுதி பெற, வாடிக்கையாளர்கள் கோல்டு லோன் பெற்றவராக இருக்க வேண்டும் அல்லது வேறு ஏதேனும் நிதி நிறுவனத்தில் பெற்ற கடனை எங்கள் நிறுவனத்திற்கு மாற்றி இருக்க வேண்டும். இந்த போட்டியின் மூலம் வாடிக்கையாளர்கள் கார், ஸ்கூட்டர், தங்க நாணயங்கள், சைக்கிள்கள் மற்றும் பிற சிலிர்ப்பூட்டும் பரிசுகளை வெல்லும் வாய்ப்பை பெறுவர். மேலும் விவரங்களுக்கு, வாடிக்கையாளர்கள் தங்கள் அருகிலுள்ள முத்தூட்டு மினி பைனான்சியர்ஸ் கிளையை அணுகலாம் அல்லது டோல்-ஃப்ரீ நம்பர்: 1800 2700212 அழைக்கலாம் அல்லது https://bit.ly/gold-loan-connect-க்கு வருகை தரலாம்.

எங்கள் நிறுவனத்தில், வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் கடன் தொகையை உடனடியாக டெபாசிட் செய்தல், ஆன்லைன் டாப்-அப், பகுதி அளவு தொகை மற்றும் வட்டி செலுத்தும் விருப்பங்கள், ஆன்லைன் லோன் ரினியூவல் விருப்பங்கள், 'ரிலாக்ஸ் லோன்', முழு காலத்திற்கும் ஒரே வட்டி விகிதத்துடன் கடன், மற்றும் வாடிக்கையாளர்கள் கடனை தவணை முறையில் திருப்பிச் செலுத்த உதவும் 'சூப்பர் இஎம்ஐ' திட்டம் போன்ற பல்வேறு சேவைகளை வாடிக்கையாளர்கள் பெறலாம். மேலும், வாடிக்கையாளர்கள் தங்கள் தங்க ஆபரணங்களை இன்சூரன்ஸ் பாதுகாப்புடன் எங்கள் நிறுவனத்தின் சேஃப்பில் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் 'சேஃப் லாக் கோல்டு லோன்' வசதியையும் முத்தூட்டு அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது, இந்த வசதி குறிப்பிட்ட கிளைகளில் மட்டும் கிடைக்கிறது. விரைவில் படிப்படியாக நாடு முழுவதும் உள்ள அனைத்து கிளைகளிலும் கிடைக்கும்.

முத்தூட்டு மினி பைனான்சியர்ஸின் மேனேஜிங் டைரக்டர் திரு. மேத்யூ முத்தூட்டு கூறுகையில், "வாடிக்கையாளருக்கே முன்னுரிமை என்ற அணுகுமுறையுடன், சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், மேலும் எங்களின் இந்த முயற்சி வாடிக்கையாளருடனான உறவை மேலும் வலுப்படுத்தவும், தங்கநகைக் கடன் பெற விரும்பும் புதிய வாடிக்கையாளர்களை உருவாக்கவும் உதவும். இத்துறையில் எங்களின் பங்களிப்பை அதிகரிக்கவும், புதுமையான தயாரிப்புகளின் அடிப்படையில் விருப்பமான கோல்டு லோன் நிறுவனமாக திகழ்வதை உறுதி செய்யவும், வளர்ந்து வரும் எல்லோ முத்தூட்டு குடும்பத்தில் இணைந்திட உற்சாகமான காரணங்களை வழங்குவதற்காகவும் இந்த போட்டி உருவாக்கப்பட்டுள்ளது” என்றார்.

லக்கி டிரா கன்டெஸ்ட் குறித்து முத்தூட்டு மினி பைனான்சியர்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி திரு. பிஇ மத்தாய் கூறுகையில், "எங்கள் கோல்டு லோன் உத்சவத்தை தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். வாடிக்கையாளர்களின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுவதே எங்களின் முக்கிய முயற்சியாகும். எங்களின் அனைத்து முயற்சிகளிலும் எப்போதும் வாடிக்கையாளர்களே மையப் புள்ளியாக உள்ளனர். அந்த வகையில், வாடிக்கையாளர்களுக்கான எங்களின் நீண்டகால அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக லக்கி டிரா கன்டெஸ்ட் தொடங்கப்பட்டுள்ளது. இந்த போட்டி பெரிய வெற்றியாக இருக்கும். மேலும், எங்களின் அன்பான வாடிக்கையாளர்களுடன் புதிய பிணைப்பின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார்.
 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

அரசு ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு.. 1 கோடி குடும்பங்கள் நிம்மதி.!
அனில் அம்பானிக்கு அதிர்ச்சி.! அமலாக்கத்துறை எடுத்த அஸ்திரம்.. இடியாப்ப சிக்கலில் ரிலையன்ஸ் பவர்