Share Market Today: சரிவில் முடிந்த பங்குச்சந்தை: சென்செக்ஸ் வீழ்ச்சி: 18,000 நீடிக்கும் நிப்டி

By Pothy RajFirst Published Jan 19, 2023, 4:05 PM IST
Highlights

தேசிய மற்றும் மும்பை பங்குச்சந்தைகள் இருநாள் உயர்வுக்குப்பின் இன்று மீண்டும் சரிவுடன் வர்த்தகத்தை முடித்தது.

தேசிய மற்றும் மும்பை பங்குச்சந்தைகள் இருநாள் உயர்வுக்குப்பின் இன்று மீண்டும் சரிவுடன் வர்த்தகத்தை முடித்தது.

அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை வரலாம் என்பதால், அந்நாட்டில் நிலவும் உயர்ந்த பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அந்நாட்டு பெடரல் ரிசர்வ் உறுதி பூண்டுள்ளது. பிப்ரவரி 1ம் தேதி நடக்கும் கூட்டத்தில் 25 புள்ளிகள்வரை வட்டிவீதத்தை உயர்த்தலாம் என்று செய்திகள் வெளியாகின.

அதுமட்டுமல்லாமல் அமெரிக்காவை பொருளாதார மந்தநிலைக்குள் செல்லாமல் தடுக்க பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்பதால், பெடரல் ரிசர்வ் வட்டியை உயர்த்தலாம். இதனால் நேற்று அமெரிக்கப் பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று முதலீட்டை எடுப்பதில் ஆர்வமாக இருந்தனர். இதனால் அமெரிக்க பங்குச்சந்தையில் சரிவு காணப்பட்டது.

இதனால் இந்திய முதலீட்டாளர்களும் காலை முதலே வர்த்தக்தில் ஆர்வத்துடன் ஈடுபடாததால், காலைமுதலே சரிவு காணப்பட்டது. இந்த சரிவு வர்த்தக நேரத்திலும் தொடர்து மாலையும் வீழ்ச்சியுடனே முடிந்தது. 

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 187 புள்ளிகள் வீழ்ந்து, 60,858 புள்ளிகளில் வர்த்தகத்தை முடித்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 57 புள்ளிகள் சரிந்து, 18 18,107 புள்ளிகளில் முடிந்தது.

மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனங்களின் பங்குகளில், 10 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே லாபத்தில் முடிந்தன, மற்ற 20 நிறுவனப் பங்குகள் சரிவடைந்தன. ஆக்சிஸ் வங்கி, டெக் மகிந்திரா, லார்சன் அன்ட் டூப்ரோ, எச்டிஎப்சி வங்கி, மாருதி, எச்டிஎப்சி, விப்ரோ, பஜாஜ் பைனான்ஸ், பவர்கிரிட், ரிலையன்ஸ் ஆகிய பங்குகள் மதிப்பு உயர்ந்துள்ளன.

நிப்டியில் அதானி என்டர்பிரைசஸ், ஏசியன் பெயின்ட்ஸ், டாடா மோட்டார்ஸ், இன்டஸ்இன்ட் வங்கி, கோடக் மகிந்திரா, ஆகிய பங்குகள்பெரும் சரிவைச் சந்தித்தன. கோல் இந்தியா, யுபிஎல், ஓஎன்ஜிசி, எஸ்பிஐ காப்பீடு, பிபிசிஎல் பங்குகள் லாபத்தில் முடிந்தன

click me!