Share Market Today: கரடியிடம் சிக்கிய பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிப்டி சரிவு: பேடிஎம் பங்கு 11% வீழ்ச்சி

By Pothy RajFirst Published Nov 17, 2022, 4:02 PM IST
Highlights

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் இன்று சரிவுடன் தொடங்கி, வீழ்ச்சியுடனே வர்தத்கத்தை முடித்தன. பேடிஎம் பங்கு மதிப்பு 11% வரை சரிந்தது.

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் இன்று சரிவுடன் தொடங்கி, வீழ்ச்சியுடனே வர்தத்கத்தை முடித்தன. பேடிஎம் பங்கு மதிப்பு 11% வரை சரிந்தது.

அமெரிக்காவில் கடந்த வாரம் பணவீக்கம் குறைந்ததால் பெடரல் வங்கி வட்டியை குறைவாக உயர்த்தும் என்ற தகவலால் முதலீட்டாளர்கள் உற்சாகமடைந்தனர். ஆனால், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பெடரல் ரிசர்வ் வங்கி கடும் நடவடிக்கை எடுக்க இருப்பதாக எழுந்த செய்தி அமெரி்க்க, ஆசியச் சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 

சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை: வீழ்ச்சியில் சென்செக்ஸ், நிப்டி: பேடிஎம் பங்கு 9% சரிவு

இது தவிர, உக்ரைன், ரஷ்யா இடையே மீண்டும் போர் தொடங்குமா என்ற அச்சமும் முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. ஆசியச் சந்தையிலும் காலை முதலே வர்த்தகம் சுணக்கமாக இருந்தது, இந்தியச் சந்தையிலும் எதிரொலித்தது.

 வர்த்தகம் தொடங்கும் முன்பே மும்பை, தேசியப் பங்குச்சந்தையில் பங்குகள் சரிவை நோக்கி இருந்தன. வர்த்தகம் தொடங்கியதிலிருந்து, பங்குச்சந்தையில் கடும் ஏற்ற இறக்கம் காணப்பட்டு ஊசலாட்டத்துடனே வர்த்தகம் நடந்தது.

சாதகமான போக்கு நேற்று காணப்பட்டதால் பிற்பகலுக்குப்பின் வர்த்தகம் சூடுபிடித்து ஏற்றத்தில் முடிந்தது. ஆனால் இன்று எந்தவிதமான போக்கும் தென்படவில்லை. மாலை வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 230 புள்ளிகள் குறைந்து, 61,750 புள்ளிகளில் முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 65 புள்ளிகள் சரிந்து, 18,343 புள்ளிகளில் நிலைபெற்றது.

Paytm:பலத்த அடி! 20 கோடி டாலர் மதிப்புள்ள PayTm பங்குகளை விற்பனை செய்கிறது SoftBank

நிப்டியைப் பொறுத்தவரை பொதுத்துறை பங்குகள், கட்டுமானத்துறை பங்குகள் மட்டுமே உயர்வில் சென்றன. மற்ற துறைப் பங்குகள் அனைத்தும் சரிவில் முடிந்தன.

மும்பைப் பங்குசந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனங்களில் 8 நிறுவனப் பங்குகள் லாபத்திலும் மற்ற 22 நிறுவனப் பங்குகள் சரிவிலும் முடிந்தன. லார்சன் அன்ட் டூப்ரோ,  பவர்கிரிட், ஐசிஐசிஐ வங்கி, பார்தி ஏர்டெல், ஆக்சிஸ் வங்கி, ரிலையன்ஸ், பஜாஜ் பைனான்ஸ் ஆகிய நிறுவனப் பங்குகள் லாபம் ஈட்டின. மற்ற நிறுவனப் பங்குகள் சரிவில் முடிந்தன.

பேடிஎம் நிறுவனத்தில் பெரும்பான்மையாக முதலீடு செய்துள்ள சாப்ட்பேங் தனது பங்குகளை விற்பனை செய்ய இருப்பதால், பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதிலிருந்து பேடிஎம் நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு மோசமாக சரிந்தது. சாப்ட்வங்கி தன்னிடம் இருக்கும் 200 மில்லின் டாலர் மதிப்பிலான பேடிஎம் பங்குகளை ஒன்97 கம்யூனிகேஷன்(One97 Communications) நிறுவனத்துக்கு பிளாக் டீல் வழியாக விற்பனை செய்ய முடிவெடுத்தது. 

முறையான பொருளாதாரத்தை விரிவுபடுத்தவே பணமதிப்பிழப்பு: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

அதாவது பேடிஎம் நிறுவனத்தின் ஒரு பங்கின் சந்தை மதிப்பு ரூ 601.45 ஆக இருக்கும்போது, அந்த விலையைவிட 8 சதவீதம் குறைவாக, ரூ.555க்கு விற்பனை செய்ய உள்ளது சாப்ட்பேங். இதனால் பேடிஎம் பங்கு மதிப்பு 11 சதவீதம் சரிந்தது
 

click me!