
வீட்டில் சமையலுக்குப் பயன்படுத்தும் 14 கிலோ எடை கொண்ட சிலிண்டர்கள் திருட்டைக் கட்டுப்படுத்தவும், அதன் எண்ணிக்கையைக் கண்காணிக்கவும் கியூஆர்(QR code) குறியீட்டை மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
ஏற்கெனவே புழக்கத்தில் இருக்கும் சிலிண்டர்களுக்கும், புதிதாக உருவாக்கப்படும் சிலிண்டர்களுக்கும் இந்த QR குறியீடு உருவாக்கப்பட்டு பொறிக்கப்படும்.
Paytm:பலத்த அடி! 20 கோடி டாலர் மதிப்புள்ள PayTm பங்குகளை விற்பனை செய்கிறது SoftBank
இந்த QR குறியீடு சிலிண்டர்கள் மீது பொறிக்கப்படும்போது, சிலிண்டர்கள் திருடுபோவது தடுக்கப்படும், சிலிண்டர்கள் நகர்வு கண்காணிக்கப்படும், அதன் எண்ணிக்கையும் முறைப்படுத்தி சிறப்பாக நிர்வாகம் செய்ய வழிவகுக்கும்.
நவம்பர் 14 முதல் 18ம் தேதிவரை உலக எல்பிஜி வாரம் 2022 கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக உத்தரப்பிரதேசத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி பங்கேற்றார். அவர் பேசுகையில் “ எரிசக்தி மனித வாழ்வில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
முறையான பொருளாதாரத்தை விரிவுபடுத்தவே பணமதிப்பிழப்பு: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்
னைவருக்கும் குறைந்தவிலையிலும், முழுமையாக சிலிண்டர்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். நிலையான முறையில் உற்பத்தி செய்து, தேவைக்கு வழங்கிட வேண்டும்” எனத் தெரிவித்தார்
இதற்கிடையே மத்திய அமைச்சர் ஹர்திப் சிங் பூர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டார்
அதில்அவர் கூறுகையில் “ எரிபொருள் கண்காணிக்கப்பட வேண்டும். குறிப்பிடத்தக்க புதுமையாக, ஏற்கெனவே இருக்கும் சிலிண்டர்களிலும், புதிதாக தயாரிக்கப்படும் சிலிண்டர்களிலும் QR குறியீடு பொறிக்கப்படும்.
இந்த தி்ட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது, ஏற்கெனவே இருக்கும் சிலிண்டர் திருட்டைத் தடுக்க முடியும். சிலிண்டர் நகர்வை கண்காணிக்க முடியும், சிலிண்டர்களை சிறப்பாக மேலாண்மை செய்து நிர்வாகம் செய்ய முடியும்”எ னத் தெரிவித்தார்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.