தங்கம் விலை தொடர்ந்து 5 நாட்களுக்குப்பின் இன்று குறைந்துள்ளது. கடும் விலை உயர்வைச் சந்தித்த நடுத்தரக் குடும்பத்தினருக்கு இந்தசெய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து 5 நாட்களுக்குப்பின் இன்று குறைந்துள்ளது. கடும் விலை உயர்வைச் சந்தித்த நடுத்தரக் குடும்பத்தினருக்கு இந்தசெய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை இன்று கிராமுக்கு 20 ரூபாயும், சவரனுக்கு 160 ரூபாயும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை மாலை நிலவரப்படி, கிராம் ரூ.4,970 ஆகவும், சவரன், ரூ.39,760 ஆகவும் இருந்தது.
ஏற்றத்தில் தங்கம் விலை! 3 நாட்களில் ரூ.500க்கு மேல் உயர்வு! இன்றைய நிலவரம் என்ன?
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(வியாழக்கிழமை) கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ரூ.4,950 ஆகவும், சவரனுக்கு 160 ரூபாய் சரிந்து, ரூ.39 ஆயிரத்து 600 ஆகவும் குறைந்துள்ளது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4,950க்கு விற்கப்படுகிறது.
தங்கம் விலை கடந்த வாரத்தில் இருந்து தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்தது, சவரன் ரூ.37ஆயிரம் வரை சென்றநிலையில் கடந்த 10 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,144 அதிகரித்தது.
உலகின் பாதி சொத்துக்களை வைத்துள்ள அமெரி்க்க,சீன மக்கள்!இந்தியாவிடம் எவ்வளவு?ஸ்வாரஸ்ய அறிக்கை
இந்த வாரம் தொடங்கியதிலிருந்தும் தங்கம் விலை ஏறுமுகத்தில இருந்தது. இதனால் சிறுகச் சிறுகத் தங்கம் வாங்கி சேமிக்க நினைக்கும் நடுத்தரக் குடும்பத்தினருக்கு பெரியஅதிர்ச்சியாக விலை உயர்வு அமைந்தது.
கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.500க்கு மேல் உயர்ந்தது. ஆனால், இன்று நடுத்தரக் குடும்பத்தினருக்கு நிம்மதியளிக்கும் வகையில் சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது, கடந்த 5 நாட்களுக்குப்பின் தங்கம் விலை குறைந்துள்ளது.
உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் மீண்டும் தொடர்ந்தால், அமெரிக்க பெடரல் வங்கி வட்டியை கூடுதலாக உயர்த்தினால், தங்கத்தின் விலையிலும் பெரிய அளவில் தாக்கத்தை எதிர்பார்க்கலாம் என்று சந்தை வல்லுநர்கள் தெரிவித்தனர்.
வெள்ளி விலை இன்று வீழ்ச்சி அடைந்துள்ளது. வெள்ளி கிராம் ரூ.68.50 ஆக இருந்தநிலையில் ஒரு ரூபாய் 30 பைசா சரிந்து, ரூ.67.20ஆகவும், கிலோவுக்கு ரூ.1300 குறைந்து, ரூ.67,200 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது