வார வர்த்தகத்தின் கடைசிநாளன இன்று மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கி சரிவை நோக்கி திரும்பியுள்ளது. சென்செக்ஸ், நிப்டி கடும் ஊசலாட்டத்துடன் உள்ளன.
வார வர்த்தகத்தின் கடைசிநாளன இன்று மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கி சரிவை நோக்கி திரும்பியுள்ளது. சென்செக்ஸ், நிப்டி கடும் ஊசலாட்டத்துடன் உள்ளன.
அமெரிக்காவின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பெடரல் வங்கி கடுமையாக வட்டிவீதத்தை உயர்த்தும் என்ற தகவல் வெளியானது. ஆனால், இது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்று பெடரல் ரிசர்வ் அதிகாரிகள் தெரிவித்தாலும், உறுதியான அறிவிப்பு ஏதும் இல்லை. இதனால் பெடரல் ரிசர்வ் அறிவிப்பை எதிர்பார்த்து சர்வதேச முதலீட்டாலர்கள் எச்சரிக்கையுடன் வர்த்தகத்தில் ஈடுபடுகிறார்கள்
கரடியிடம் சிக்கிய பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிப்டி சரிவு: பேடிஎம் பங்கு 11% வீழ்ச்சி
சீனாவில் அதிகரித்துவரும் கொரோனா பரவல் சர்வதேச சந்தையில் பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகின் மிகப்பெரிய நுகர்வோரான சீனாவில் கொரோனா தாக்கம் அதிகரித்திருப்பதால் கச்சா எண்ணெய் விலையும் குறைந்து வருகிறது. சீனாவில் கொரோனா அதிகரித்துவருவது முதலீட்டாலர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பலத்த அடி! 20 கோடி டாலர் மதிப்புள்ள PayTm பங்குகளை விற்பனை செய்கிறது SoftBank
ஆசியச் சந்தையிலும் இன்று வர்த்தகம் சுணக்கத்துடனும், ஏற்ற இறக்கத்துடனே காணப்படுகிறது. இந்தியச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 150 புள்ளிகள் உயர்ந்து, ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியது.
ஆனால், சிறிது நேரத்தில் பங்குச்சந்தையில் புள்ளிகள் சரியத் தொடங்கின. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ், 147 புள்ளிகள் குறைந்து, 61,603 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 51 புள்ளிகள் சரிந்து, 18,291 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது.
எல்பிஜி கேஸ் சிலிண்டரில் புதிய மாற்றம்! QR குறியீட்டை அறிமுகப்படுத்துகிறது மத்திய அரசு: என்ன காரணம்?
நிப்டியில் உலோகம், தகவல் தொழில்நுட்பம், ஊடகம், பொதுத்துறை பங்குகள் ஏற்றத்துடன் உள்ளன. மாறாக, மருந்துத்துறை, ஆட்டோமொபைல் துறைப் பங்குகள் சரிவில் உள்ளன.
மும்பைப் பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனப்பங்குகளில் 11 நிறுவனப் பங்குகள் சரிந்துள்ளன, 19 நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளன. ஏசியன் பெயின்ட்ஸ், லார்சன் அன்ட் டூப்ரோ, பார்தி ஏர்டெல், ஆக்சிஸ் வங்கி, ஹெச்டிஎப்சி, விப்ரோ, இன்போசிஸ், ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் விலை அதிகரி்த்துள்ளன. ரிலையன்ஸ், டிசிஎஸ், டாக்டர்ஸ்ரெட்டி, மகிந்திரா அன்ட் மகிந்திரா, மாருதி, என்டிபிசி, டைட்டன், சன்பார்மா உள்ளிட்ட பங்குகள் விலை குறைந்துள்ளன.