இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று படுமோசமான சரிவைச் சந்தித்தன. சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தன.
இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று படுமோசமான சரிவைச் சந்தித்தன. சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தன.
ரூ. 7 லட்சம் கோடி
தொடர்ந்து 4வது நாளாக பங்குச்சந்தை இன்றும் சரிவில் முடிந்துள்ளது. இந்த 4 நாட்களில் மட்டும் முதலீட்டாளர்களின் சொத்துமதிப்பு ரூ.7 லட்சம் கோடி குறைந்துள்ளது. இன்று ஒரே நாளில்மட்டும் ரூ.3.80 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
வெளிநாட்டு பயணத்துக்காக மாதம்தோறும் 100 கோடி டாலர் செலவிடும் இந்தியர்கள்:RBI அறிக்கை
அமெரிக்காவில் நிலவும் பணவீக்கத்தைக் குறைக்க பெடரல் ரிசர்வ் வட்டிவீதத்தை மேலும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு, புவிஅரசியல் காரணங்கள் ஆகியவற்றால் பங்குச்சந்தையில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டது.
1500புள்ளிகள் காலி
கடந்த 4 வர்த்தக தினங்களில்மட்டும் சென்செக்ஸ் 1500 புள்ளிகளை இழந்துள்ளது. இந்தியப் பங்குச்சந்தையின் மதிப்பு 261.40 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது.
மாலை வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 927 புள்ளிகள் குறைந்து, 59,744 புள்ளிகளாகக் குறைந்தது. நீண்டகாலத்துக்குப்பின் சென்செக்ஸ் 60ஆயிரம்புள்ளிகளுக்கு கீழ் சரிந்தது.
தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 272 புள்ளிகள் சரிந்து 17,554 புள்ளிகளில் நிலைபெற்றது.
4 முக்கியக் காரணங்கள்
சர்வதேசச் சந்தை சூழல்
அமெரிக்கப் பங்குச்சந்தை 2023ம் ஆண்டில் இல்லாத அளவாக நேற்று சரிந்தது. அமெரிக்காவின் நாஷ்டாக், டோவ் ஜோன்ஸ் ஆகியவை வீழ்ந்தது ஆசியப் பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஜப்பான் நிக்கி, தென்கொரியா, ஹாங்காங் சந்தைகளும் நெருக்கடிக்குள்ளாகி சரிந்தன. இந்தியப் பங்குச்சந்தையிலும் இந்தத் தாக்கம் எதிரொலித்தது.
பள்ளத்தில் பங்குச்சந்தை| சென்செக்ஸ் 500 புள்ளிகள் வீழ்ச்சி, நிப்டி சரிவு:அதானி பங்கு காலி
புவிஅரசியல் பதற்றம்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் மீண்டும் உருவாவதற்கான பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா,ரஷ்யா இடையிலான அணு ஆயுத ஒப்பந்தத்தை ரஷ்ய அதிபர் புடின் ரத்து செய்தது பதற்றத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.அமெரிக்கா, ரஷ்யா இடையிலான பனிப்போர் சந்தையில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மீண்டும் கச்சா எண்ணெய் விலை, உணவுப் பொருட்கள் விலை அதிகரி்க்குமா என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவியது.
பெடரல் ரிசர்வ்
அமெரிக்காவில் பணவீக்கம் குறைந்தபாடில்லை. இதனால் அந்நாட்டு பெடரல் ரிசர்வ் எனும் மத்திய வங்கி வட்டிவீதத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அமெரிக்க பொருளாதாரத்தின் எதிர்மறையான போக்கு, முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதானி பங்கு
அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து ஒரு மாதமாக வீழ்ந்து வருவது சந்தையின் வீழ்ச்சிக்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாகும்.அதானி என்டர்பிரைசர்ஸ் பங்கு இன்று 10% சரிந்தது. அதானி குழுமத்தின் 10 நிறுவனப் பங்குகளும் இன்று வீழ்ச்சி அடைந்தன
அந்நிய முதலீட்டாளர்கள்
அமெரிக்காவில் பெடரல் ரிசர்வ் வட்டிவீதத்தை உயர்த்தும் பட்சத்தில் இந்தியச் சந்தையில்முதலீடு செய்துள்ள அந்நிய முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்பப் பெறுவார்கள். இதனால் இந்திய ரூபாய் மதிப்பு கடும் நெருக்கடிக்குள்ளாகும் சூழல் ஏற்படும். இந்த ஆண்டில் இதுவரை ரூ.30ஆயிரம் கோடி முதலீட்டை அந்நிய முதலீட்டாளர்கள் திரும்பப்பெற்றுள்ளனர்
மெக்கின்ஸி நிறுவனம் 2,000 ஊழியர்களை வேலையிலிருந்து நீக்க முடிவு
தொழில்நுட்ப காரணங்கள் ரூபாய் மதிப்பு சரிவு
பங்குச்சந்தையில் ஹெவிவெயிட் பங்குகள் என்று அழைக்கப்படும் பஜாஜ் பின்சர்வ், பைனான்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், எஸ்பிஐ, டாடா மோட்டார்ஸ், விப்ரோ, என்டிபிசி, எச்யுஎல், ஏசியன்பெயின்ட்ஸ், ஆகியவை 3 சதவீதம்வரைஇன்று சரிந்தது சரிவுக்கு காரணங்களில் ஒன்று.இந்திய ரூபாய் மதிப்பும் 4 பைசா குறைந்து, ரூ.82.83 அளவில் இருந்தது.
மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனங்களில், ஐடிசி நிறுவனப் பங்கைத் தவிர மற்ற 29 நிறுவனப் பங்குகளும் சரிவில் முடிந்தன.
நிப்டியில் அதானி என்டர்பிரைசர்ஸ், அதானி போர்ட்ஸ், கிராஸிம் இன்டஸ்ட்ரீஸ், ஜேஎஸ்டபிள்யு, பஜாஜ் பைனான்ஸ் ஆகிய பங்குகள்அதிக இழப்பைச் சந்தித்தன. ஐடிசி, பஜாஜ் ஆட்டோ, டிவிஸ் லேப்ரட்ரீஸ், அதிக லாபமடைந்தன. நிப்டியில் அனைத்து துறைப் பங்குகளும் சரிவைச் சந்தித்தன.