இந்தியர்கள் ஒவ்வொரு மாதமும் வெளிநாட்டுப் பயணத்துக்காக 100 கோடி டாலர்கள் செலவிடுகிறார்கள். இது கொரோ காலத்துக்கு முந்தைய காலத்தைவிட அதிகம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்தியர்கள் ஒவ்வொரு மாதமும் வெளிநாட்டுப் பயணத்துக்காக 100 கோடி டாலர்கள் செலவிடுகிறார்கள். இது கொரோ காலத்துக்கு முந்தைய காலத்தைவிட அதிகம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
2022-23ம் ஆண்டு ஏப்ரல்-டிசம்பர் மாதங்களில், இந்தியர்கள் வெளிநாட்டுப் பயணத்துக்காக 995 கோடி டாலர் செலவிட்டுள்ளனர். இது கடந்த 2021-22ம் ஆண்டில் 416 கோடி டாலராக இருந்தது. 2019-20ம் ஆண்டில் 540 கோடி டாலராக இருந்தது.
இதென்ன இங்கிலாந்தா! இங்கிலீஸ்ல பேசுறீங்க! விவசாயியை கடிந்து கொண்ட நிதிஷ் குமார்
2021-22ம் ஆண்டில் வெளிநாட்டு பயணத்துக்காக அனுப்பப்பட்ட பணம் என்பது, 700 கோடி டாலராகும். இதன் மூலம் இந்தியர்கள் வெளிநாட்டுப் பயணத்துக்காக மாதம்தோறும் 100 கோடி டாலர்களை செலவிடுகிறார்கள் எனத் தெரிவித்துள்ளது.
வி3ஆன்லைன் நிறுவனத்தின் இயக்குநர் சபன் குப்தா கூறுகையில் “ இந்தியர்கள் தங்கள் குடும்பத்தார், நண்பர்களுடன் உலக நாடுகளுக்கு சுற்றுலா செல்வதுஅதிகரித்துள்ளது.
குறிப்பாக வியட்நாம், தாய்லாந்து, ஐரோப்பிய நாடுகள், பாலி உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கிறார்கள். அதிலும், ஐரோப்பிய நாடுகள், இந்தோனேசியா, வியட்நாம், தாய்லாந்து, துபாய் நாடுகளுக்கு அதிகளவில் செல்கிறார்கள்” எனத் தெரிவித்தார்
மத்திய பட்ஜெட்டில் வெளிநாடுகளுக்கு பயணிக்கும் இந்தியர்களுக்கான டிசிஎஸ் ரேட்டை 5 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வால் வெளிநாடுகளுக்கு இந்தியர்கள் பயணம் செய்வது குறையும் என்று சுற்றுலா நிறுவனங்கள் கவலையடைகின்றன.
டெல்லி துணை முதல்வர் மணி்ஷ் ஷிசோடியா மீது விசாரணை: சிபிஐ-க்கு உள்துறை அமைச்சகம் பச்சைக்கொடி
கடந்த 2021ல் கொரோனோ தொற்று காரணமாக இந்தியர்கள் வெளிநாடுகளில் செலவிடுவது குறைந்து, 323 கோடி டாலராகச் சரிந்தது.2019-20ல் 695 கோடி டாலரும், 2018-19ல் 480 கோடி டாலர் அளவுக்கும் இந்தியர்கள் செலவிட்டனர்.